SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் 4 நாட்களாகியும் தடுப்புகள் அமைக்காத அவலம்: நகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்

2020-07-05@ 07:35:10

காஞ்சிபுரம்: கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில், 4 நாட்களாகியும் தடுப்புகள் அமைத்து முடக்கம் செய்யவில்லை என நகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, 45வது வார்டு தாயார்குளம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட இடத்தில் 4 நாட்களாகியும், அப்பகுதியில், தடுப்புகள் அமைத்து முடக்கவில்லை. துப்புரவு மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்ஞ்சாட்டுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு, காஞ்சிபுரம் பெருநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்திற்க்கு நேரடியாக சென்று எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

நோயாளிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படாமல் வழக்கம் போல் பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாயார்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பரவ அதிகளவில் வாய்ப்புள்ளது. இதனால் அப்குதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா நோயாளியின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரியபடுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கொரோனா இருப்பதையே முழுவதுமாக மறைத்துள்ளதாகவும் புகார் கூறுகின்றனர். எனவே, கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளியின் வீடு தனிமைபடுத்தப்படுவதுடன், சுற்றுப்புறத்தை முழுவதுமாக தடைசெய்ய வேண்டும். மேலும் அப்பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்