SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சியில் தொடர்ந்து கனமழை: மக்கள் மகிழ்ச்சி

2020-07-05@ 07:31:41

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில மாதத்துக்கு மேலாக வெயில் கொளுத்தி வந்தது. இதில், கடந்த சில வாரங்களாக வெயில், மேகமூட்டம் என மாறிமாறி இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து, சில நாட்களாக, ஓரளவு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், காஞ்சியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் காஞ்சிபுரத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், ரங்கசாமி குளம், கீரை மண்டபம் உள்பட பல பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று, பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம் உள்பட பல பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்