SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்

2020-07-05@ 00:20:17

தூத்துக்குடி: போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் என்று இன்ஸ்பெக்டர் மீது எஸ்பியிடம் பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்.தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த சாந்தி, எஸ்பி ஜெயக்குமாரிடம் அளித்துள்ள புகார் மனு: நான், தூத்துக்குடி தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின் வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.கடந்த பிப்.22ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழக முதல்வர் வருகை இருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்ததன் பேரில் சென்றார்.

ஆனால் காலையில் அவர் விபத்தில் இறந்ததாக தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு நின்ற போலீசார் என் அண்ணன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து விட்டதாக கூறினர். நாங்கள் விசாரித்தபோது அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்றும், என் அண்ணனை ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் பைக்கால் இடித்து, அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறை அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள்துறை அதிகாரிக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் அளித்து இருக்கிறோம்.

 இந்நிலையில் இந்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் விசாரணை இருக்கிறது என்று சொல்லி காவலர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டதன் பேரில் ஜூன் 1ம் தேதி காலை 11 மணி அளவில் தென்பாகம் காவல் நிலையம் சென்றேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மிகவும் கோபப்பட்டு எங்களது புகார் மனுக்களை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார். நான் மறுத்ததால் அவர் எனது தலைமுடியை பிடித்து இழுத்து உள் அறைக்குள் கொண்டுபோய் தன் கைகளால் முதுகில் பலமுறை ஓங்கி குத்தினார். வலியால் அழுத போது காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார்.

 மேலும் என் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக பெண் போலீஸ் ஒருவரிடம் புகார் பெற்று, கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் என்னை இரவு 8 மணி அளவில் ஆஜர்படுத்தினார். அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தினர். எனக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு எதுவும் தரவில்லை. அதன் பின்னர் என்னை சிறையில் அடைத்தனர். தற்போது எனக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. பெண் என்றும் பாராமல் என்னிடம் மிருகத்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து விசாரிக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்