SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியட்நாமில் ஜொலிக்கும் ஓட்டல் திறப்பு: தட்டு முதல் டாய்லெட் வரை எல்லாமே தங்கம்: கொரோனா காலத்தில் இப்படியும் அனுபவிக்கிறாங்க...

2020-07-05@ 00:04:10

ஹனோய்: கொரோனா காலத்தில் உலகமே சோர்ந்து போயிருக்கும் நிலையில், தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கத்தால் ஆன   ஓட்டல் வியட்நாமில் திறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தியதையடுத்து வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் ஒரு ஐந்து நட்சத்திர  ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. விருந்தினர்களை கவர்வதற்காக 24 காரட் தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள் மற்றும்  கழிப்பறைகள், சுவர்கள் என, எல்லாமே ஒரே தங்கத்தால் மினுமினுக்கிறது. இந்த டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஓட்டல், ஹோவா  குழுமத்திற்கு சொந்தமானது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட விந்தாம் ஓட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் இன்க், இந்த ஓட்டலை நிர்வகிக்கிறது.

கிட்டதிட்ட 11 ஆண்டாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 1,493 கோடி) மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் 400 அறைகள்  உள்ளன. வாடகையை பொறுத்தவரை ஓர் இரவு தங்க 250 டாலர் (இந்திய ரூபாயில் 18,669) கட்டணம் செலுத்த வேண்டும். தங்கத் தட்டில்  சாப்பிடுவதில் இருந்து, தங்கத்திலான டாய்லெட் அறை வரை பயன்படுத்திக் கொள்ளலாம். காசு, பணம் இருந்தால் போதும் ஒரு ராஜாவை போல,  தங்க முலாம் பூசப்பட்ட ஓட்டலில் தங்கி சுகபோகங்களை அனுபவிக்கலாம். கொரோனா கொடுமைக்கு மத்தியில், மக்கள் இப்படியும் சந்தோஷமாக  வாழ்க்கை வாழ்கின்றனர்.

இதுகுறித்து ஓட்டலின் உரிமையாளரும் ஹோவா பின் குழுமத்தின் தலைவரான நுயென் ஹு டுவோங் கூறுகையில், ‘உலகத்தில் இதுபோன்ற  ஓட்டல் வேறெங்கும் இல்லை. எங்கள் குழுமத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட பொருட்கள் செய்யக்கூடிய தொழிற்சாலை உள்ளது. அதனால், இங்குள்ள  எங்களது உபகரணங்கள் மற்றும் தளவாடங்களின் விலை மிகவும் மலிவானது. கொரோனா வைரஸ் உலகளாவிய சுற்றுலாவை பாதித்த நிலையில்,  தற்போது வியட்நாமில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஓட்டலை திறந்துள்ளோம்’’ என்றார்.

ஒரே ஆண்டில் போட்ட பணத்தை எடுப்போம்
ஓட்டல் உரிமையாளர் டுவோங் கூறுகையில், ‘‘ஓட்டலின் மேற்கூரையின் மேல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. ஓட்டலை கட்டியெழுப்பப்  பயன்படுத்திய பணத்தை (முதலீடு லாபம்) 2021ம் ஆண்டு இறுதிக்குள் எடுத்துவிடுவோம். ஓட்டலை தங்க முலாம் பூசுவதற்கு சுமார் ஒரு டன் தங்கம்  பயன்படுத்தப்பட்டது. ஹோ சி மின் நகரத்திலும், மத்திய வியட்நாமில் உள்ள ஒரு ரிசார்ட்டிலும் தங்கமுலாம் பூசப்பட்ட ஓட்டல்களை திறக்க  திட்டங்களை வகுத்துள்ளோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்