SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலி 18,655 ஆக அதிகரிப்பு: ஒரே நாளில் 23,000 பேர் பாதிப்பு

2020-07-05@ 00:03:49

புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 22,771 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  18,655ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதார துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றின் காரணமாக நேற்று காலை 8 வரையிலான கடந்த 24  மணி நேரத்தில் புதிதாக 22,771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் மொத்தம் 6,48,315 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 442 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,655 ஆக அதிரித்துள்ளது. சிகிச்சை பெற்று குணமடைவோரின்  எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 3,94,226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,35,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்.  வைரசால் பாதிக்கப்பட்டோரில் 60.80 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்