வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
2020-07-04@ 21:37:09

ஹனோய்: ஊரடங்கு முடிந்த நிலையில், வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறக்கப்பட்டது. சாப்பிடும் தட்டு முதல் டாய்லெட் வரை எல்லாமே தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தியதையடுத்து வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. விருந்தினர்களை கவர்வதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள் மற்றும் கழிப்பறைகள், சுவர்கள் என, எல்லாமே ஒரே தங்கத்தால் ஆன ஓட்டல் போல் காட்சியளிக்கிறது.
இந்த, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், ஹோவா குழுமத்திற்கு சொந்தமானது. இந்த ஹோட்டல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட விந்தாம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் இன்க் நிர்வகிக்கிறது. இதுகுறித்து, ஹோவா பின் குழுமத்தின் தலைவர் நுயேன் ஹு டுவோங் கூறுகையில், ‘உலகத்தில் இதுபோன்ற ஓட்டல் வேறெங்கும் இல்லை. ஓட்டலின் கூரையின் மேல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர் அறைகளுக்குள், குளியலறைகள் தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஒரு இரவு தங்குவதற்கு 250 டாலர் முதல் கட்டணம் இருக்கும். ஓட்டலை தங்க முலாம் பூசுவதற்கு சுமார் ஒரு டன் தங்கம் பயன்படுத்தப்பட்டது. ஹோ சி மின் நகரத்திலும், மத்திய வியட்நாமில் உள்ள ஒரு ரிசார்ட்டிலும் தங்கமுலாம் பூசப்பட்ட ஓட்டல்களை திறக்க திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றார்.
மேலும் செய்திகள்
ஜெப ஆலயத்திற்கு வெளியே ஜெருசலேமில் 7 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் கொலை: காவல்துறையினர் சரமாரியாக தாக்கி கொலை செய்த வீடியோ வெளியீடு
இலங்கை நீதிமன்றம் உத்தரவால் சர்ச்சை: தமிழக மீனவர்களின் 3 படகுகளை அரசுடைமையாக்கியது இலங்கை
தமிழர்களுக்கு அதிகாரம் இலங்கையில் சட்டப்பிரிவு 13ஏ முழுமையாக அமல்படுத்தப்படும்: அதிபர் ரணில் தகவல்
அஜர்பைஜான் தூதரக அதிகாரி சுட்டு கொலை: ஈரானில் பயங்கரம்
கல்வியறிவு இல்லாதவருக்கு மனநலம் பாதிக்க வாய்ப்பு: இங்கிலாந்தில் ஆய்வறிக்கை வெளியீடு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!