நாகலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனைக்கு தடை!!
2020-07-04@ 13:18:17

கோஹிமா: நாகலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகலாந்து. இங்கு நாய்களின் இறைச்சிகளை உணவுப்பொருளாக பயன்படுத்தும் வழக்கம். இதற்காக, மேற்கு வங்காளம் உள்பட பிற அண்டை மாநிலங்களில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒரு நாய் ரூ.50 வரை அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாகலாந்தில் உள்ள திமாபூர் சந்தைகளில் உணவுக்காக நாய்கள் விற்கப்படுவது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. குறிப்பாக சாக்கு பை ஒன்றில் நாய் ஒன்றின் வாயை கட்டிவைத்தபடி ஒருவர் கொண்டு சென்ற படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நாய் இறைச்சி விற்பனைக்கு எதிராக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். நாகாலாந்தில் உடனடியாக நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளும் மாநில அரசுகளுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பின. இதன் தொடர்ச்சியாக நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக நாகலாந்து அரசு அறிவித்துள்ளது. நாகலாந்து தலைமைச்செயலாளர் பிறப்பித்த உத்தரவில், நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நமது நிர்வாக நடைமுறைகள் மிகத் திறன் வாய்ந்தது: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண இருக்கும் பிரதமர் மோடி..?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி
சுப்ரீம் கோர்ட் அமர்வில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!