SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸ்காரர் முத்துராஜ் தேடப்படும் குற்றவாளி: சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி

2020-07-04@ 00:56:04

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மற்றொரு போலீஸ்காரரான முத்துராஜ் அப்ரூவராக மாறிதாகவும், சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் பரவியது.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் சிபிசிஐடி ஐஜி சங்கர் இதை மறுத்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். எப்ஐஆர் என்பது முதல் தகவல் அறிக்கை மட்டும் தான். விசாரணையின் போக்கில் மேலும் குற்றவாளிகள் சேர்க்கப்படலாம். போலீஸ்காரர் முத்துராஜை தொடர்ந்து தேடி வருகிறோம். அவரையும் பிடித்து விடுவோம். நாங்கள் பிடித்து வைத்ததாக கூறுவது கற்பனை. அவ்வாறு பிடித்து வைக்க வேண்டிய தேவை இல்லை. யாரையும் சிபிசிஐடி போலீசார் அப்ரூவராக மாற்ற முயற்சிக்கவில்லை.

சாத்தான்குளம் காவல் நிலையம் உள்ளிட்ட சில இடங்களின் சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்கள் மீதும் புகார்கள் வந்துள்ளன. அந்த நேரத்தில் பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்துவோம். இந்த வழக்கில் தேவையெனில் இனி சேர்க்கவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை போலீஸ்காரர் மிரட்டிய தால் வருவாய் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்ட சாத்தான் குளம் போலீஸ் நிலையம், ஐகோர்ட் கிளை உத்தரவையடுத்து மீண்டும் காவல் துறையிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

* பெண் போலீஸ் ரேவதி சாட்சியம்
இதற்கிடையே சாத்தான்குளம் காவல் நிலைய பெண் போலீஸ் ரேவதி நேற்று போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி கோர்ட்டிற்கு வந்தார். அவர் தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜராகி மதியம் முதல் மாலை வரை நீதிபதியிடம் தனியாக சாட்சியம் அளித்தார். பின்னர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ezhumalaiyaan21

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

 • school21

  ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

 • rashya21

  ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

 • maha21

  மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!

 • 21-09-2020

  21-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்