கொரோனா முடக்கத்தால் மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தை திறக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை...! வீடியோ கான்ஃரென்ஸ் மூலம் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை கூட்டம்!!!
2020-07-03@ 16:27:08

சென்னை: சென்னையில் கொரோனா முழு முடக்கத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்றமும் மூடப்பட்டன. கொரோனா ஊரடங்கின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டு கிட்டத்தட்ட 100 நாட்களை கடந்துள்ளனர். நீதிமன்றத்தை திறக்காததால் வழக்கறிஞர்கள் தங்களது வாழ்வாராதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வழக்கறிஞர்கள் 'அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை' மட்டும் வீடியோ கான்ஃரென்ஸ் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, 33 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தொடர்ந்து வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், நீதிமன்றங்களை திறந்து நேரடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தீர்மானம் செய்து தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழக அரசு வருகின்ற 6ம் தேதி முதல் சென்னையில் கடுமையான ஊரடங்கானது தளர்த்தப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல தொழிற்சாலைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதனால், மற்ற அனைத்து நிறுவனங்களும் செயல்படும் நிலையில், நீதிமன்றத்தையும் திறக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தனர். அதன் அடிப்படையில், வருகின்ற திங்கள் கிழமை நீதிமன்றம் திறக்கப்பட்டால், எந்தெந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று வீடியோ கான்ஃரென்ஸ் மூலம் தலைமை நீதிபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 6ம் தேதி 'அவரச வழக்குகளை விசாரிக்க ' நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை மட்டும் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வயதாக வழக்கறிஞர்கள், அவர்களின் வீடுகளிலிருந்தே வீடியோ கான்ஃரென்ஸ் மூலம் தங்கள் வாதங்களை தொடங்கலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளன. மேலும், இந்த கூட்டத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று இரவு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
படூரில் தமிழக அரசின் வாழ்ந்துகாட்டுவோம் திட்ட செயல்பாடுகள் ஆய்வு
பண்ருட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
தண்ணீர் பந்தல் திறப்பு விழா
புள்ளிமான் மர்ம சாவு
6 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி கிராமங்களில் விவசாயிகள் பைக் பிரசாரம்
ஆவடி அருகே ரூ.5.71 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள்: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்