SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழப்பம் நீடிப்பு

2020-07-03@ 00:25:43

நாடு முழுவதும் கொரோனாவின் பிடி இறுகிவரும் நிலையில் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு 100 நாட்களை நெருங்குகிறது. இத்தனை நாட்களாக அன்றாட வாழ்ைவ மறந்து வீட்டுக்குள் மக்கள் முடங்கியுள்ளனர். இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும், பேருந்து, ரயில் வழக்கம் போல் எப்போது இயங்கும், வெளியூர்களில் உள்ள குடும்பத்தை சந்திப்பது எப்போது, உறவினர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பது எப்போது என்ற கனவில் நாட்களை மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு நகர்த்தி வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வே முடிந்துவிடும். ஆனால் எழுதிய தேர்வுக்கான முடிவு தெரியாமலேயே இன்னும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். பொதுபோக்குவரத்து இல்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அலுவலகத்தில் மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொள்வார்களா என்ற குழப்பத்தில் பல தொழிலாளர்கள் உள்ளனர்.

அன்றாட வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் கூட கொரோனா மண்அள்ளி போட்டுடிச்சி என்று புலம்பிக்கொண்டு, அடுத்து என்ன வியாபாரம் செய்யலாம் என்ற குழப்பத்தில் சிலர் உள்ளனர். 3 மாதம் சம்பளம் இல்லை. வீட்டுக்கடன் உள்பட பல்வேறு கடன்கள் அப்படியே இருக்கு. பள்ளி கட்டணம், கல்லூரி கட்டணம் என்று வரிசைக்கட்டிக்கொண்டு செலவுகள் காத்திருக்கு. அடுத்து என்ன நடக்குமோ என்ற குழப்பத்தில் நடுத்தர குடும்பத்தினர் உள்ளனர். இப்படி எதிர்கால போராட்ட குழப்பத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நல்லபடியாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற கவலையில் நாட்களை நகர்த்தி வருகின்றனர். மேலும் குடும்பத்தில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையும் அவர்களை விடவில்லை. இப்படி பணக்காரர்கள் முதல் பாமரர் வரை அனைவரையும் அவரவர் நிலையில் நிறுத்தி நிம்மதியை பறித்துக்கொண்ட கொரோனாவினால் இந்த ஆண்டு கருப்பு ஆண்டாகவே மாறிவிட்டது.

குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலம் பல்வேறு கேள்விகளை சுமந்து நிற்கிறது. இறுதியாண்டு முடித்து நல்ல வேலைக்கு சென்று பெற்றோரின் பாரத்தை குறைக்க நினைத்த மாணவர்கள் கனவில் இடி விழுந்தது போன்றாகிவிட்டது. நாட்டின் நிதி நிலைமை முதல் வேலைவாய்ப்பு, ெபாருளாதாரம் ஆகியவற்றை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் அரசும் இருக்கிறது. கொரோனா காட்டில் கண்கட்டி விட்டது போன்று அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிலைமை சீரடைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் போது சில குழப்பங்கள் தீரலாம். பல குழப்பங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். இருந்தாலும் அனைத்தையும் கடந்து பயணித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்