SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலையில் திடீர் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 சரிவு: நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி

2020-07-03@ 00:22:24

சென்னை: தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஊரடங்கால் பல பகுதிகளில் நகைக்கடை மூடப்பட்டிருந்தும் தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 24ம்தேதி  தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. சவரன் ₹37,272க்கு விற்கப்பட்டது. இது தங்கம் வரலாற்றில் அதிகப்பட்சமான விலையாகும். கொரோனா பாதிப்பு நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் விலை  கடந்த மாதம் 24ம் தேதி சாதனையை முறியடித்தது. அதாவது, கிராமுக்கு ₹53 அதிகரித்து, ஒரு கிராம்  ₹4,684க்கும்,  சவரனுக்கு ₹424 அதிகரித்து,  ₹37,472க்கும் விற்பனையானது.

சவரன் ₹37472 அளவுக்கு உயர்ந்தது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். சவரன் ₹38000ஐ நெருங்கி விடுமோ என்ற அச்சம் நகை வாங்குவோரிடம் இருந்து வந்தது. நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது கிராமுக்கு ₹62 குறைந்து, ஒரு கிராம் ₹4,622க்கும், சவரனுக்கு ₹496 குறைந்து சவரன் ₹36,976க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்திருப்பது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்