SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா நோயாளிகளுக்கு நேரத்துக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காத கொடுமையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-07-03@ 00:22:23

‘‘கொரோனா நிலைமை எல்லாம் எப்பிடியிருக்கு..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழக துணை முதல்வர்  ஓபிஎஸ்சின் தம்பிக்கு கொரோனா தொற்று உறுதியானதும் அவர் மதுரையில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரது குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்பட்டதால், அவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். துணை முதல்வரின் தம்பிக்கு கார்  டிரைவராக இருந்தவருக்கு முதல்நாள் கொரோனா பரிசோதனை நடத்தி, மறுநாள் தொற்று இருப்பதை உறுதி செய்து தெரிவித்தனர்.  தொற்று உறுதியானதும், எப்படியும் ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொரோனா சிகிச்சைக்கு  கூட்டிச் செல்வார்கள் என பாதிக்கப்பட்டவரின் குடும்பமே எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், யாரும் அவரை கூட்டிச்செல்லவில்லை. காலை முதல் இரவு வரை சிகிச்சைக்கு  கூட்டிச் செல்ல சுகாதாரத் துறையினர் வராததால், பாதிக்கப்பட்டவர் தரப்பில்  இருந்து போன் மேல் போன் போட்டு, ‘கொரோனா உறுதியாகியதா சொன்னாங்க.. எங்கே என்னை கூட்டிட்டுப் போவீங்க’ என்று கேட்டுக்கேட்டு அலுத்து விட்டார்களாம். இரவாகி வெகு நேரத்திற்கு பிறகே, ஆம்புலன்சில் வந்த சுகாதாரத்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.   அதுவரையிலும் அந்த டிரைவர் வீட்டைத் தேடி சுகாதாரத்துறையினர் ஒருவரும் வரவில்லையாம். ‘பெரிய இடத்து டிரைவரா இருக்குறவருக்கே இந்த நிலையென்றால் சாதாரண,  சாமானிய நிலையிலிருக்குறவங்களை வாரக் கணக்குல காக்க வச்சிருவாங்க போலிருக்கே’ என்று தேனிவாசிகள் பேசிக்கொள்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நேரத்துக்கு உணவு கிடைக்கலனு கொரோனா நோயாளிகள் புலம்புறாங்களே..’’‘‘வேலூர் மாவட்டத்துல கடந்த ஒரு மாதத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,500ஐ தாண்டிபோய்கிட்டு இருக்குது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிச்சுகிட்டே போகுது. விட்டா சென்னை நிலைமை வந்துருமோனு மக்கள் பயத்துல இருக்காங்க. கொரோனாவால பாதிக்கப்பட்டவங்கல, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கிறாங்க, இந்த கொரோனாவுல, பிஞ்சு குழந்தைகள் முதல், முதியவர்கள் வரையில் பாதிக்கப்பட்டிருக்காங்க, அதோடு ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய்னு பாதிப்பில் இருக்குறவங்களும் பலர் சிகிச்சை பெற்று வர்றாங்க, அவங்களுக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சரியான நேரத்துக்கு உணவும் தண்ணீரும் கிடைக்குறதில்லையாம். இதனால, கொரோனா நோயாளிங்க கடும் அவதிக்குள்ளாகி வர்றாங்களாம். அதேசமயம் கொரோனா வார்டுல பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் கூட சரியா கிடைக்கமாட்டேங்குதாம். மருத்துவமனை தலைமை அதிகாரி கேட்டா, கொடுத்துட்டோம்னு சொல்லாறங்களாம். ஆனால் நோயாளிகளுக்கு கொடுக்கறதில்லையாம். கொடுத்ததா கணக்கு மட்டும் காட்டிடுறாங்களாம். எனவே மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குழந்தைகளின் நிலையை கவனத்தில் கொண்டு சரியான நேரத்திற்கு உணவு, பால் வழங்க நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை வைக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மணல் கொள்ளையில் அதிமுக மாஜி மும்முரமா இருக்கார்னு சொல்றாங்களே..’’ ‘‘கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் பூலுவப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நாதேகவுண்டன்புதூரில் மணியக்காரர் குட்டை உள்ளது. இதனை, 3 அடி ஆழத்திற்கு தூர்வாரி, அதில் கிடைக்கும் வண்டல் மண்ணை, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது. ஆனால், விவசாயிகளை புறந்தள்ளிவிட்டு, சாமி என்ற பெயர் கொண்ட அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் களம் இறங்கி கலக்குகிறார். 5 ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி, விதிமுறைக்கு புறம்பாக அன்றாடம் வண்டல் மண் மொத்தமாக அள்ளுகிறார். டிராக்டர் ஒன்றுக்கு ரூ.200, டிப்பர் ஒன்றுக்கு ரூ.800 என படுஜோராக விற்பனை செய்கிறார். தினமும் 250 டிராக்டர், 250 டிப்பர் என விற்பனை செய்து, பல லட்சங்களை குவிக்கிறார். இவரது காட்டில் ஒரே கரன்சி மழைதான்.இவருக்கு, காமெடி நடிகர் பெயர் கொண்ட ஒருவர், கைத்தடியாக உள்ளார். இவர் தனியார் தோட்டம் ஒன்றில் வண்டல் மண்ணை, ஸ்டாக் வைத்து, கிராக்கி ஏற்படும்போது கூடுதல் விலைக்கு விற்கிறார். 3 அடி ஆழத்திற்கு பதில் 6 அடி ஆழத்திற்கு குட்டையை தோண்டி பதம் பார்த்து விட்டனர். அப்பட்டமாக நடக்கும் இந்த விதிமீறலை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. இவர்களது தடாலடி காரணமாக, விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கலையேனு விரக்தியில் உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தமிழகம் முழுவதும் 10 கூட்டுறவு இணை பதிவாளர்களை மாத்தியிருக்காங்களே..’’‘‘ஆமா.. இதில் மாங்கனி மண்டலத்தில் பணியாற்றி வந்த இணைபதிவாளரும் ஒருத்தர். அவர் விழுப்புரத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் இவரது மாறுதல் மட்டும் ஒரே நாளில் ரத்தாகி விட்டதாம். இது என்ன அதிசயம். விவிஐபியின் நிழலானவர் ஆதரவு இருந்தால் எல்லாமே சாத்தியம் என்கின்றனர் விவரம் அறிந்த அதிகாரிகள். அதோடு மாறுதல் மாறி வந்ததற்கான காரணத்தையும் போட்டு உடைக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு முன்பு ரேஷன் கடை விற்பனையாளர் தேர்வு நடத்தப்பட்டு, இலைகட்சியை சேர்ந்தவர்கள் ₹2 முதல் 5 லட்சம் வரை அந்த பணியிடத்துக்கு ரேட் பேசி வச்சிட்டாங்களாம். இணைபதிவாளர் புதுசாக வந்தால் பணியிடத்தை நிரப்புவதில் பெரிய சிக்கல் ஏற்படும். ஆனால் தனக்கு நெருக்கமான இந்த அதிகாரி இருந்தால், எல்லாம் சுலபத்தில் முடிந்துவிடும் என்று கணக்கு போட்டார் நிழலானவர். இதனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரே நாளில், மீண்டும் அதே இணைபதிவாளரை கொண்டு வந்துட்டார்னு சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்