SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயல்பு நிலை எப்போது?

2020-07-02@ 03:35:38

இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது கொரோனா. தற்போதைய புள்ளிவிபரங்கள்படி கடந்த ஜூன் மாதத்தில் மட்டுமே இந்தியாவில் 4 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 12 ஆயிரம் பேர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர். கடந்த மே மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதம் கூடுதல் பாதிப்பை ஜூன் மாதத்தில் இந்தியா எதிர்கொண்டுள்ளது. கொரோனாவால் தமிழகம் சந்தித்த பாதிப்புகளும் அதிகம். வீதிக்கு வீதி கொரோனா அச்சத்தோடு பொதுமக்கள் நடமாடுகின்றனர். தமிழகத்தின் தலைநகராகிய சென்னையில் நோய் பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் மட்டுமே அங்கு 2393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னை பாதிப்பு 2182 ஆக குறைந்துள்ளது. இது சிறிய ஆறுதல் என்றாலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் அதிகளவில் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக சுமார் 4 ஆயிரம் பேர் ெகாரோனாவால் தினசரி பாதிக்கப்படுகின்றனர். இதில் பாதிக்கு பாதி பேர் தலைநகர் சென்னையிலும், மீதமுள்ள நபர்கள் வெளிமாவட்டங்களிலும் உள்ளனர். இப்படிப்பட்ட நிலை தொடருவதால், ஆறாம் கட்ட ஊரடங்கில் கூட பெரிய அளவிலான தளர்வுகள் நமக்கு கிடைக்கவில்லை. 5ம் கட்ட ஊரடங்கில் கூட அரசு, தனியார் பஸ்கள் இயக்கம் இருந்தது. தொற்று அதிகரிப்பால் 6ம் கட்டத்தில் பஸ்கள் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

கூடி கும்மாளம் அடித்தே பழக்கப்பட்ட மக்கள் மத்தியில் தனிநபர் இடைவெளி, சமூக இடைவெளி என்பது தொடர்ச்சியாக கேள்விக்குறியாகி வருகிறது. வீதியில் ஒருவருக்கு கொரோனா வந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் சகஜமாக நடமாடி வருகின்றனர். அத்தெருவில் உள்ள கடைகளை கூட அதிகாரிகள் சென்றே சீல் வைக்க வேண்டியதுள்ளது. இதன் விளைவுதான் மீண்டும் ஞாயிற்று கிழமை அனைத்து கடைகளுக்கும் கட்டாய விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்த பகுதிகளின் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு விதிமுறைகளை அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

சில மாநகரங்களில் டீ கடைகள், ஐஸ்கீரிம் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அக்கறையே இல்லாமல் தொடர்ந்து கொரோனாவோடு போராடுவதிலேயே தமிழக அரசு நேரத்தை செலவிட்டு வருகிறது. கொரோனாவும் எல்லை மீறி தமிழகத்தில் சுழன்று அடிப்பதால், அதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் தமிழக அரசு திகைத்து நிற்கிறது. இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, மக்கள் வாழ்வாதாரம் பேணும் திட்டங்களை அறிவித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. மக்கள் மத்தியில் மார்ச் மாதம் தொடங்கிய மந்தநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இயல்பு நிலை எப்போது வரும் என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்