கொரோனா ஊரடங்கால் செட்டிநாடு கைத்தறி சேலைகள் முடக்கம்: ரூ.50 லட்சத்துக்கு மேல் நஷ்டம்
2020-07-01@ 05:46:52

காரைக்குடி: கொரோனா ஊரடங்கால் காரைக்குடியில் செட்டிநாடு சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் முடங்கியதால் ரூ.50 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் செட்டிநாடு பாரம்பரிய கைத்தறி நெசவுக்கூடங்கள் அதிகளவு செயல்படுகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், சினிமா படப்பிடிப்புக்கு வருபவர்கள் சேலைகளை அதிகளவில் விரும்பி வாங்கி செல்வர். தற்போது ஊரடங்கால் சுற்றுலாப்பயணிகள் வருகை தடைபட்டுள்ளது. இதனால் செட்டிநாடு சேலைகள் விற்பனையாகாமல் முடங்கியுள்ளன. இதனை நம்பியுள்ள 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலையிழந்துள்ளனர். நெசவாளர் வெங்கட்ராமன் கூறுகையில், ‘‘காரைக்குடியில் கட்டிடங்களை பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவர்.
இவர்கள் இங்குள்ள பாரம்பரிய பொருட்களையும் பார்வையிட்டு வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் 100 ஆண்டு பாரம்பரியமிக்க செட்டிநாடு கைத்தறி சேலைகளை அதிகளவில் விரும்பி வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது. தவிர ஊரடங்கு காரணமாக உற்பத்தி செய்த சேலைகளை, சென்னை போன்ற பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்ய முடியவில்லை. 5,000க்கும் மேற்பட்ட சேலைகள் விற்பனையாகாமல் உள்ளன. ரூ.50 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கும் வேலை தரமுடியவில்லை. வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறோம். வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியவில்லை. வங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
இரக்கம் காட்டிய தங்கம் விலை... சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது..!
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 44,720க்கு விற்பனை : பவுன் ரூ. 45,000 நெருங்குகிறது!!
இனி தங்கத்தை காட்சி பொருளாக தான் பார்க்க முடியும் போல : சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.44,520-க்கு விற்பனை ; விழிபிதுங்கி நிற்கும் பெண்கள்!!
சென்னையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை..!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10%ல் இருந்து 8.15 சதவீதமாக உயர்வு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!