SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவை அதிரடி

2020-07-01@ 02:32:55

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மார்ச் 25ல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசும் ஊரடங்கை அமல்படுத்தியது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, ஊரடங்கில் அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்களும் கொரோனாவுடன் வாழப்பழகிக்கொண்டதுபோல வெளி மாவட்டம், வெளி மாநிலம் சென்று வந்தால், சளி, காய்ச்சல் இருந்தால் டெஸ்ட் எடுத்துக்கொள்வதும், முக்கிய இடங்களில் தங்கள் உடல் வெப்ப அளவை சோதித்துக்கொள்வதும் என பொறுப்புணர்வு அடைந்துவிட்டனர். ஆனால் தொற்று குறைந்தபாடில்லை. எனவே மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதல்வருடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ குழு ஊரடங்கு நீட்டிக்கப்படமாட்டாது என்பதுபோல கூறினார்.

ஆனால் தமிழகத்தில் 6வது கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பு செய்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். தமிழத்தில் கொரோனா தொற்றை ஒழிக்க, ஊரடங்கு மட்டும் போதும் என தமிழக அரசு
கருதுகிறது. இக்கொடிய வைரஸை ஒழிக்க, ஊரடங்கு நீட்டிப்பு மட்டும் உதவாது. கொரோனா வைரஸ் நோய் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிந்து, அதனை ஒழிப்பதே சிறந்த நடவடிக்கை ஆகும். கொரோனா பரவியுள்ள இடத்தை ‘தனிமைப்படுத்தப்பட்ட பகுதி’ என அரசு அறிவிக்கிறது. அந்த இடத்தில் இருந்து மக்கள் வெளியேறவும், வெளியே இருந்து மக்கள் உள்ளே செல்லவும் அனுமதி அளிக்காமல், தீவிர நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றை  
கட்டுப்படுத்த முடியும். இந்நடவடிக்கையில், தமிழக அரசு முற்றிலும் கோட்டை விட்டுவிட்டது.

தலைநகர் சென்னையில் இருந்து மக்கள் வெளியேறியதால்தான் தொற்று பரவல் அதிகமாகிவிட்டது என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். மருத்துவ குழுவினரோ பொது போக்குவரத்தால்தான் பரவலாகிவிட்டது என்கிறார்கள். இப்படி வெவ்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகளால் மக்கள் கொரோனா பீதியுடனேயே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என தமிழக அரசு, மக்கள் மீது குற்றம் சுமத்திவிட்டு போகிறது. தொற்று பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையை வேகமாக முன்னெடுப்பதும், மக்களிடம் போதிய அளவில் விழிப்புணர்வு, நம்பிக்கையை ஏற்படுத்துவதும் மாநில அரசின் கடமை ஆகும். இதை சீராக மேற்கொண்டால்தான் மக்களிடமிருந்து பீதியும் மறையும். கொரோனா தொற்றும் ஒழியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்