மக்களை காக்க வேண்டிய முதல்வரே செயலற்று இருப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
2020-06-30@ 09:09:11

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை ஐபிசி 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா? இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் முதலமைச்சர் அவர்களே? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்
தேர்தல் ஆணையம் உத்தரவு: மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட்: கமல் ஹாசன் நன்றி
தமிழ்நாட்டில் வருங்காலத்தில் பாஜ பெரிய சக்தியாக வரும்: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு
பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
முழுமையான பரிசோதனை தரவுகள் பெறாமல் கொரோனா தடுப்பூசிக்கு அவசரப்படுவது ஏன்? கே.பாலகிருஷ்ணன் கேள்வி?
பேஸ்புக் சிங்கள அரசின் கைக்கூலி: வைகோ கடும் கண்டனம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்