SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசியுவில் தமிழகம்

2020-06-30@ 07:56:55

1792 ம் ஆண்டிலேயே நமது மண்ணில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதை வரலாறுகள் உறுதி செய்கின்றன. நவீன அறிவியலால் கூட குணப்படுத்த முடியாத பல நோய்களை மூலிகைகள் மூலம் நமது முன்னோர்கள் குணப்படுத்தி உள்ளனர். மருத்துவத்தில் நாம் தான் முன்னோடி என்பதற்கு இதுவே சான்று. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டி வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு
வர முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திண்டாடுகின்றன. தமிழகத்தில் மார்ச் 25ம் தேதி கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு மதுரையில் ஏற்பட்டது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை முறையாக தனிமைப்படுத்தி இருந்தால், பரவல் குறைந்திருக்கும். ெசன்னை கற்றுத்தரும் பாடத்தை உணர்ந்திருந்தால் இரண்டாம் கட்ட நகரங்கள் இன்று கொரோனா பிடியில் சிக்கியிருக்காது. தற்போது பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து மின்னல் வேகத்தில் செல்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு முறையும் கொரோனா பரவலுக்கு வழிவகை செய்து விட்டு பின்னர் ஊரடங்கு அறிவிப்பது ஏன்? ஊரடங்கு, தளர்வு, மீண்டும் ஊரடங்கு. ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. மதுரை உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சிகிச்சையின் தரம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

ஒவ்வொரு முறையும் அலட்சியத்தின் விளைவால், தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. சென்னை கட்டுக்குள் வரவில்லை; இரண்டாம் கட்ட நகரங்களில் அதிகரிக்கும் பாதிப்பு, கிராமங்களில் கொரோனா நோயாளிகள் கணிசமாக உயர்வது, மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் நிலையில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தால் பலி எண்ணிக்கையும் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. இன்னும் சில வாரங்களுக்குள் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை வெகுதூரத்தில் இல்லை.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தமிழகம் முழுமையாக விடை பெற வேண்டும். ஆகையால், சிந்தித்து செயல்பட ேவண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தற்போதைய நிலை படுமோசமாக உள்ளது. குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது நல்லதல்ல. கொரோனா நோயாளிகளுக்கு தங்கும் வசதிகளை ஏற்படுத்துவது கடினமாகி வரும் நிலையில், மருத்துவ வசதிகள் முறையாக கிடைக்க வாய்ப்புகள் குறைவு.

போதியளவு வென்டிலேட்டர் வசதிகள் இல்லாத ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முக்கியமாக, கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவ்விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் பல லட்சம் நோயாளிகள் உருவாகி விடும் அபாய நிலை ஏற்பட்டு விடும். இதனால் மருத்துவ வசதிகள் கிடைக்காத அவல நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது. பல வசதிகள் இருந்தும் அமெரிக்கா சந்தித்து வரும் கடும் பாதிப்பை உணர்ந்து, ஆக்கப்பூர்வமான முறையில் அரசு செயல்பட வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்