ஜம்மு காஷ்மீரில் அதிகரிக்கும் தீவிரவாத ஊடுருவல்; அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
2020-06-29@ 08:15:23

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குல்ச்சோகர் பகுதியில் பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும், இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் தேடுதல் வேட்டையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்