கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் போட்டி போட மாட்டேன்: டி.கே.சிவக்குமார் ட்விட்
2020-06-22@ 15:33:28

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மூத்த தலைவர் என்ற முறையிலும் அவருக்கு உள்ள அனுபவத்தையும் நான் மதிக்கிறேன். எனவே அவருடன் நான் போட்டி போட மாட்டேன் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்தனர்.
சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தினேஷ் குண்டுராவின் ராஜினாமா கடிதத்தை மட்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சித்தராமையாவே நீடிக்க அக்கட்சி மேலிடம் அனுமதி வழங்கியது. மாநில தலைவர் பதவியை யாருக்கு வழங்கலாம் என்று சித்தராமையாவிடம் சோனியா காந்தி ஆலோசனை கேட்டிருந்தார். அதற்கு எம்.பி.பட்டீல் உள்ளிட்ட சிலரது பெயரை சித்தராமையா பரிந்துரை செய்தார். இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டார்.
டி.கே.சிவக்குமார் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு சித்தராமையாவுக்கும், அவருக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் ஒரு பலம் வாய்ந்த கட்சி ஆகும். முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார். அவர் மூத்த தலைவர் என்ற முறையிலும், அவருக்கு உள்ள அனுபவத்தையும் நான் மதிக்கிறேன் மற்றும் அவருடன் நான் போட்டி போட மாட்டேன் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வேண்டுகோள் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பிரசாரத்தை குறைக்க முடிவு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
தீவிரமடையும் கொரோனா பரவல்!: தேர்தல் பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு..!!
சொல்லிட்டாங்க...
மே. வங்கத்தில் ராகுலின் பிரசார கூட்டங்கள் ரத்து: மற்ற தலைவர்களுக்கும் அழைப்பு
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்