SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து சென்னை வாசிகள் குறுக்கு வழியில் திண்டுக்கல் பயணம்: இ-பாஸ் இல்லாமல் வருவதால் தொற்று அதிகரிக்கும் அபாயம்

2020-06-20@ 21:18:38

மணப்பாறை: சென்னையில் இருந்து டூவீலர்களில் வருவோர் திருச்சி எல்லையில் இருந்து குறுக்கு வழியில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்வதால், அங்கு தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்ட எல்லை முடியும் இடத்தில் உள்ளது தங்க மாபட்டி கிராமம். இங்கு திண்டுக்கல் எஸ்.பி சக்திவேல் உத்தரவுப்படி போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் அரசின் இ-பாஸ் இருந்தால் மட்டுமே இங்கு எல்லையை கடக்க போலீசார் அனுமதிக்கின்றனர்.

இதனால், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் தங்க மாபட்டி போலீஸ் சோதனை சாவடியை தவிர்த்து மாற்று வழியில் திண்டுக்கல் எல்லையை அடைய குறுக்குவழியை கையாள்கின்றனர். திருச்சி மாவட்ட பகுதியான கல்பட்டி சத்திரத்திலிருந்து கர்ணம்பட்டி, தங்க மாபட்டி, புதூர் வழியாகவும், இது போல, கீரனூர், புது வாடி வழியாக அய்யலூர், கிணத்துப்பட்டி வழியாகவும் திண்டுக்கல்லை அடைகின்றனர். இரு சக்கர வாகனங்கள் மூலமும், நடந்தும் செல்லும் இவர்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் வழிமறித்து, ஏன் இந்த பாதையில் வருகிறீர்கள் எனக்கேட்டு பணம் பறிக்க துவங்கி உள்ளனர்.

இ-பாஸ் இல்லாமல் வருவதால் பாதிக்கப்படுபவர்கள், போலீசில் புகார் தர முடியாமல் சென்று விடுகின்றனர். இதுபற்றி அறிந்ததும் இந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி பெரிய பள்ளம் ஒன்றை வெட்டி திண்டுக்கல் போலீசார் தடுத்துள்ளனர். இதனையடுத்து, தற்போது சென்னையிலிருந்து வருபவர்கள் வையம்பட்டி, கருங்குளம், பொண்ணனியாறுடேம், கடவூர், மாமரத்துப்பட்டி, அய்யலூர் வழியாக திண்டுக்கல் செல்கின்றனர். நேற்றுமுதல் இவர்கள் இவ்வாறு சென்று வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவர்கள் கொரோனா பரிசோதனை செய்யாமல், தாங்கள் சென்ற இடங்களில் கட்டுப்பாடின்றி உலா வருவதால் வைரஸ் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மாற்று வழி திருச்சி மாவட்ட எல்லையிலிருந்து வருவதால், அம்மாவட்ட போலீசாருக்கு தகவல் ெதரிவித்துள்ளோம். மேலும் பொதுமக்கள் முறையாக இ பாஸ் பெற்று, ெகாரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டு தங்களது பகுதிக்கு செல்ல வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்