மீன்களால் கொரோனா பரவுகிறதா? : சால்மன் மீனா, வேண்டவே வேண்டாம் என அலறி அடித்து ஓடும் சீன மக்கள்!!
2020-06-20@ 17:41:33

பெய்ஜிங் : சால்மன் மீனா, வேண்டவே வேண்டாம் என கூறும் அளவுக்கு சீன மக்களை கொரோனா அலற வைத்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் ஜின்பாடி என்ற மொத்த சந்தை உள்ளது. இதில் சீனர்களின் பிரியமான மீனான சால்மன் மீன் வகைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். சீனர்களுக்கு பிடித்தமான மீன் என்பதால் ஆஸ்திரேலியா, சிலி, பாரோ தீவுகள், நார்வே ஆகிய பகுதிகளில் இருந்து சீனா இறக்குமதி செய்து வந்தது.ஆனால் தற்போது இந்த மீன்களைக் கண்டாலே சீனர்கள் அலறியடித்து ஓடுகின்றனர்.
காரணம் கடந்த வாரம் ஜின்பாடி மீன் சந்தையின் சால்மன் மீன்களை வெட்டும் பலகைகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது தான். இதையடுத்து பீஜிங் நகரில் 2-வது அலை பரவத்துவங்கி இருப்பதால் சால்மன் மீனை வாங்கிட தற்போது ஆள் இல்லை. இதையடுத்து பீஜிங் நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு இருக்கிறது.மேலும் சூப்பர் மார்கெட்டுகள், ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து சால்மன் மீன்களை அவசர,அவசரமாக அப்புறப்படுத்தி வருகின்றனராம்.
மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு
கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு 2 வருட விலக்கு: சீனா உறுதி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!