SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்படும் சடலங்கள்!.. மனிதகுலத்திற்கே இழிவான செயல் என கொதித்தெழுந்த மேற்குவங்க கவர்னர்!!

2020-06-14@ 17:51:24

கொல்கத்தா : டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியது போலவே, மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்கத்தில், தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன  13 சடலங்கள் தகனத்துக்காக, கயிறு கட்டி தரதரவென்று இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்ததை அடுத்து, இது குறித்து பேசிய கவர்னர் ஜகதீப் தங்கர், “இறந்து போன மனித சடலங்களை இப்படி இழிவாக நடத்தியது மனிகுலத்தை வெட்கப்படச் செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில உள்துறை மற்றும் கொல்கத்தா மாநகராட்சி ஆணையாளரிடம் மேற்கு வங்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கு விளக்கம் அளித்த மேற்குவங்க சுகாதாரத் துறை, வீடியோ போலியானது என்று கூறியதுடன், அரசு மருத்துவமனைகளில் அநாதையாக கிடந்த உடல்கள் அவை என்றும், அவற்றுக்கும் கொரோனா பாதிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர். இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கொல்கத்தா காவல்துறை ட்வீட் செய்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்