SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைனில் பார்முலா ஒன் ரேஸ்!

2020-06-12@ 11:41:42

நன்றி குங்குமம் முத்தாரம்

கொரோனா வைரஸ் பிரச்னை முடிவுக்கு வந்தாலும் கூட விளையாட்டு  மைதானங்களைத் திறக்க சில மாதங்கள் ஆகலாம். இது போட்டி அடிப்படையில் நடக்கும் இ-கேம்ஸ் அல்லது இ-ஸ்போர்ட்ஸிற்கு புதிய விடியலைக் கொடுத்துள்ளது. இதனால் வீடியோ கேம் பிரியர்களுக்கான லைவ் ஸ்ட்ரீம் பிளாட்பார்மான ‘டுவிட்ச்’ இணையதளத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை மில்லியனில் எகிறிவிட்டது. மார்ச் இறுதியிலிருந்து டுவிட்டரில் வீடியோ கேம் குறித்த கலந்துரையாடல் 71 சதவீதமும் வீடியோ கேம் குறித்து பதிவிடுபவர்களின் எண்ணிக்கை 38 சதவீதமும் அதிகரித்துள்ளது. உலகின் பழமையான, சிறந்த விளையாட்டு நிறுவனங்களும் கூட மூடிக்கிடக்கின்றன. இப்படி மூடிக்கிடப்பதால் ஒரு வெற்றிடம் உருவாவதோடு மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர் களும் வெறுமைக்குத் தள்ளப் படுகின்றனர். இதுபோக அந்த நிறுவனங்களுக்கு வருமானம் இல்லாமல் போகிறது. அதனால் அவையும் இ-ஸ்போர்ட்ஸில் குதித்துள்ளன. ஆனால், இது வழக்கமாக நாம் விளையாடும் வீடியோ கேம்ஸ் போல இருக்காது. கெவின் டியூரன்ட், ரபேல் நடால், ரகீம்  ஸ்டெர்லிங் போன்ற உலகப்புகழ் பெற்ற விளையாட்டு ஜாம்பவான்களும் இந்த இ-ஸ்போர்ட்ஸில் களமிறங்குவதால் கோடிக்கணக்கானவர்களின் பார்வை இதன் மீது  திரும்பியிருக்கிறது.

ஆம்; மைதானத்தில் களம் கண்டவர்கள் இப்போது விர்ச்சுவல் என்று அழைக்கப்படும் மெய்நிகர் அரங்கில் தங்களது திறமைகளைக் காட்டப்போகின்றனர். மார்ச் 22, பார்முலா ஒன் கார் பந்தயமான பக்ரைன் கிராண்ட் பிரீக்ஸ் ஆரம்பமானது. ரேஸர்கள் தங்களின் கார்களில் போட்டிக்குத் தயாராக இருந்தனர். போட்டி தொடங்குவதற்கான விளக்கு ஒளிர ஆரம்பித்தது. கார்கள் பிய்த்துக்கொண்டு பறந்தன. ஆனால், இதெல்லாம் நடந்தது விர்ச்சுவல் உலகத்தில். ஆம்; பார்முலா ஒன் ரேஸர்கள் எல்லோரும் வீட்டில் இருந்தபடியே வீடியோ கேம் வழியாக தங்களின் கார்களை இயக்கினர். நிஜத்தில் நடக்கும் பந்தய தூரத்தில் பாதியளவு இந்த விர்ச்சுவல் போட்டி யிலும் இருக்கும். மைதானத்தில் கார்களை இயக்க தனிப் பயிற்சிகள் இருப்பது போல இதற்கும் பயிற்சிகள் எடுக்க வேண்டும். வெறுமனே ரிமோட்டை எடுத்துக்கொண்டு போட்டியில் இறங்கிவிடமுடியாது. அத்துடன் இந்தப் போட்டி யில் சில பிரபலங்கள் கௌரவ போட்டியாளர்களாகக்  கலந்துகொண்டனர்.  விர்ச்சுவல் உலகில் நடந்த முதல் பார்முலா ஒன் ரேஸ் இதுதான்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kalingar-pic-3

  காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

 • turkey-fire-3

  துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

 • jammu-flood-29

  ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்