மாணவர்களுக்கு இலவச சிஏ பயிற்சி
2020-06-11@ 10:38:07

சென்னை: நவம்பர் மாதம் நடக்க உள்ள சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கான இலவச வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் ஆகியவை இணைந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காயர்(சிஏ) பவுண்டேஷன் தேர்வுக்கான இலவச வகுப்புகளை நடத்த உள்ளனர். இந்த வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கிவைத்தார்.
‘வெப்பினார்’ மூலம் நடக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் மாதம் நடக்க உள்ள சிஏ பவுன்டேஷன் தேர்வுக்கு உதவும்.
இந்த வகுப்புகள் ஜூன் 10ம் தேதி(நேற்று) தொடங்கி செப்டம்பர் 20ம் தேதி வரை நடக்கிறது. இந்த வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.icai.org என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பயிற்சி பெறலாம். பதிவு செய்யும் போது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பள்ளியில் படித்த சான்று அல்லது பிளஸ் 2 ஹால்டிக்கெட் நகல்களை ஸ்கேன் செய்து sircclases@icai.in என்ற மின்னஞ்சலில் அனுப்பி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர், 8220522669/9176826789 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!