SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேகமாக சார்ஜ் ஆகும் போன்

2020-06-10@ 14:20:36

நன்றி குங்குமம் முத்தாரம்

கடந்த மூன்று மாதங்களாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் என்னென்ன புதுமைகள் நடந்தன என்பது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கசிய ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்களும் புது மாடல்களுக்காக காத்துக்கிடக்கின்றனர். லாக்டவுன் காரணமாக ஷோரூம்கள் எல்லாம் பூட்டிக்கிடந்ததால் பெரிதாக எந்த நிறுவனமும் தங்களின் தயாரிப்பை அறிமுகப்படுத்தவில்லை. ஆனாலும் அந்த நிறுவனங்கள் வருங்காலத்தை மனதில் வைத்து இயங்கிவந்தன. உதாரணத்துக்கு ஒன் பிளஸ்ஸைச் சொல்லலாம். ஒன் பிளஸ் இஸட் என்ற புது மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஒன் பிளஸ் நிறுவனம் எங்கேயும் இதை ஆதார பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலின் முதல் அறிமுகம்கூட இந்தியாவில்தான் அரங்கேறுகிறது. அத்துடன் போன் பற்றிய தகவல்கள் மற்றும் அதில் என்னென்ன வசதிகள் உள்ளன போன்ற விஷயங்களும் வெளிவந்துள்ளன. அவற்றையும் பார்ப்போம். சரியான விலையில் நவீனமான போன் என்று கேட்ஜெட் விமர்சகர்கள்  இதனைப் பற்றி சொல்கின்றனர். ஸ்டைலிஷாக 6.40 இன்ச்சில் மெகா டிஸ்பிளே, வேகமாக சார்ஜ் ஆக 4,000 mAh பேட்டரி திறன், 8 ஜிபி ரேம், 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ், 48 எம்பியில் முக்கிய கேமரா, 16 எம்பியில் அடுத்த கேமரா, 12 எம்பியில் இன்னொரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள். செல்ஃபிக்குத் தனியாக ஒரு கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம். விலை சுமார் 30 ஆயிரம் ரூபாய் என இந்தப் போனைப் பற்றி கணித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்