SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜூபிடர்

2020-06-09@ 14:14:18

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகத்தின் புதிய புகைப் படத்தை வானியலாளர்கள் வெளியிட்டு உள்ளனர். ஹவாய் தீவில் உள்ள ஜெமினி வட தொலைநோக்கி மூலம் இன்ஃப்ராரெட்டில் ஜூபிடரின் புதிய புகைப்படத்தைப் பிடித்துள்ளது சிறப்பு. லக்கி இமேஜின் என்ற தொழில்நுட்பம் மூலம் மிக உயர்ந்த தரத்தில் புகைப்படத்தை எடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் காட்சியளிக்கும். இந்தப் புகைப்படம் அப்போதே இணையத்தில் வெளியாகி வைரலானது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இப்புதிய படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக படம் பிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்களாகும். விண்வெளியில் பறக்கும்போது இவை அந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்டு கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்கு தள்ளப்படுகின்றன. சூரியக் குடும்பத்தில் மிகப்பெரியதான ஜூபிடர், பூமியைவிட ஆயிரம் மடங்குக்கும் அதிக கொள்ளளவு கொண்டது. சூரியனிடமிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் ஜூபிடரில் திடமான மேற்பரப்பு இல்லாமல், பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டதால், இது வாயுக்கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. திரவ நிலையில் உள்ள உலோகத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஹைட்ரஜன் தான் ஜூபிடரின் தீவிரமான காந்தப் புலத்தை உருவாக்குவதாகக்கருதப் படுகிறது. இன்னும் ஜூபிடரைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.


மேலும் செய்திகள்

  • செயற்கை வைட்டமின்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்