SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Bookmarks செய்து வைத்திருக்கும் இணையத் தளங்களை Export அல்லது Import செய்வது எப்படி?

2020-06-09@ 14:08:11

சில முக்கியமான இணையத்தளங்களை அல்லது அடிக்கடி பயன்படுத்தும் இணையத்தளங்களை மீண்டும் பயன்படுத்துவதற்காக Bookmark செய்து வைத்திருப்பது வழக்கமாகும். இதற்கான வசதி அனைத்து வகையான இணைய உலாவிகளிலும் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த Bookmark செய்யப்பட்ட இணையத்தளங்களை பிறிதொரு கணினியில் உள்ள உலாவிக்கு கொண்டு செல்லும் வசதியும் காணப்படுகின்றது. இதற்கு முதலில் அனைத்து Bookmark செய்யப்பட்ட இணையத்தளங்களையும் Export செய்ய வேண்டும். பின்னர் மற்றைய உலாவியில் அவற்றினை Import செய்ய வேண்டும். குரோம் உலாவியில் இதற்கான படிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

உலாவியின் மெனு பொத்தானை கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Bookmarks சென்று Bookmark Manager என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்னர் Bookmark Manager மெனுவில் Export Bookmarks என்பதை கிளிக் செய்யவும். இன்போது Bookmarks அனைத்தும் HTML கோப்பாக சேமிக்கப்படும். அதன் பின்னர் வேறொரு உலாவியில் Import செய்வதற்கு மெனுவில் Bookmarks சென்று Bookmark Manager ஐ தெரிவு செய்யவும். தொடர்ந்து Bookmark Manager மெனுவை கிளிக் செய்து Import Bookmarks என்பதை கிளிக் செய்து சேமிக்கப்பட்டுள்ள Bookmarks கோப்பினை திறக்கவும். இப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்