தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு
2020-06-09@ 13:07:19

புதுச்சேரி: தெலுங்கானா, தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வருகின்ற 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், 11-ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். இதன்படி, அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் புதுச்சேரியில் வகுப்புகள் நடைபெறுவதால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைபோல், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். 12-ம் வகுப்பு தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக் கேற்ப 12-ம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!!!
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!