பிரசவ வார்டு முன்பு மரங்களில் வளையல்களை கட்டி வினோத வழிபாடு
2020-06-08@ 21:29:00

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அரசு சமுதாய நல மையத்தில் பிரசவ வார்டு முன்புள்ள மரங்களில் பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் வளையல்களை கட்டி விநோத வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள அரசு சமுதாய நல மையத்தில் 30 படுக்கைகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளது. இந்த அரங்கம் தற்போது கர்ப்பிணிகளின் பிரசவம் பார்க்கும் வார்டாக இயங்கி வருகிறது. சின்னாளபட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், கர்ப்பிணிகளை இங்கு பிரசவத்திற்கு அழைத்து வருகின்றனர்.
பிரசவத்துக்கு முன்பு, சுகப்பிரசவம் நடைபெற வேண்டி வார்டு முன்புள்ள வேம்பு, புங்கை மரங்களில் வளையல்களை கட்டி விநோத வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். பிரசவம் முடிந்து, தாய் மற்றும் சேயை வீட்டிற்கு அழைத்து செல்லும்போது வளையல்கள் கட்டி வழிபட்ட மரங்களுக்கு நன்றி தெரிவித்து வணங்கி செல்கின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு உள்ள மரங்களின் கிளைகளில் வளையல்கள் கொத்து, கொத்தாக தொங்குகின்றன.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!