கோவையில் கைதான கிச்சான் புகாரியின் கூட்டாளி பாளை சிறையில் அடைப்ப
2013-08-16@ 01:24:27

நெல்லை : தமிழகத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற கட்ட சாகுல், முகமது தாசின், அன்வர் பிஸ்மி, சம்சுதீன், குட்டி என்ற நூருல் ஹமீது, பிலால் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 18 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கட்டசாகுல், முகமது தாசினை இரண்டாவது முறையாக 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமறைவான போலீஸ் பக்ரூதீன், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக், பிலால்மாலிக், பறவை பாதுஷா ஆகியோரை தேடி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிச்சான் புகாரியின் கூட்டாளியான அருள்நகர் தெற்கு உக்கடத்தை சேர்ந்த அம்சா மகன் அன்சாரியை (29) கோவையில் போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை கொண்டு வரப்பட்டார். ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட, அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ராமலிங்கம் உத்தரவிட்டார். இதையடுத்து அன்சாரி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
யானை தந்தத்துடன் வாலிபர் கைது
போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி 20 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: கேரளாவில் 9ம் வகுப்பு மாணவன் கைது
அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்பனை: 3 பேர் கைது; 6 பேருக்கு வலை
பேடிஎம்மின் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை மாற்றி பணம் மோசடி; ஊர்க்காவல் படை வீரர் கைது
முட்டுக்காடு பண்ணை வீட்டில் பயங்கரம்: மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை முயற்சி
உடலில் சூடு வைத்த கொடூரம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!