கொரோனா பணியால் தினமும் மனஉளைச்சல் இப்படி ஒரு ஆட்டம் போட்டாதானே... டாக்டர்கள் மன அழுத்தமும் போகும்: கர்நாடகாவில் அசத்தல்
2020-06-02@ 11:36:40

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் நான்கைந்து இடங்களில் உள்ளன. அதுபோல் விக்டோரியா உள்ளிட்ட மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வார்டில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் டாக்டர்களுக்கு பல்வேறு சுகாதார வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் தங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதால் டாக்டர்கள் ,நர்சுகள் உள்ளிட்டோருக்கு மன அழுத்தம் அதிகமாக காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து மன அழுத்தம் நீங்குவதற்கு நடனம், நகைச்சுவை துணுக்குகளை கூறுதல் உள்ளிட்ட சில யுக்திகள் கையாளப்பட்டது. சிகிச்சை முடிந்து அறைக்கு திரும்பிய பிறகு 30 நிமிடம் டாக்டர்கள் தினமும் ‘ஹாப்பி டான்ஸ்’ ஆடலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி டாக்டர்கள் முழு கவச உடையுடன் நடனம் ஆடி வருகின்றனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “கொரோனா கிட் உடை அணிவதால் இருக்கமான சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். இதை போக்க, தற்போது, நடனம் ஆடி வருகிறோம். இதனால், எங்கள் மனதிற்கு உற்சாகம் கிடைக்கிறது. மன அழுத்தம் நீங்குகிறது. மேலும், சில டாக்டர்கள் மொபைலில் படம் பார்த்து மகிழ்கின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்