SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகாதாரத்துறை இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டதின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-06-02@ 08:08:36

‘‘நேர்மையான அதிகாரியை தூக்கி அடிச்சிருக்காங்களாமே..’’ என்று அதிர்ச்சியோடு கேட்டார் பீட்டர் மாமா.   ‘‘சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக இருந்த நாகராஜன் தான் அதிரடியா மாற்றப்பட்டிருக்கிறார். இவர் நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். மதுரையில் கலெக்டராக இருந்தபோது சத்துப் பணியாளர்களை தாங்கள் சொல்லும் ஆட்களைத்தான் போட வேண்டும் என்று 2 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பிரஷர் கொடுத்தனர். அதை ஏற்காமல், இரவோடு இரவாக நேர்மையான முறையில் அனைத்து பதவிகளையும் நிரப்பி உத்தரவிட்டார். இதனால் அங்கிருந்து அதிரடியாக மாற்றப்பட்டார். தற்போது சுகாதாரத்துறைக்கு கருவிகள் வாங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் நாகராஜன் நேரடியாக தலையிடாமல் ஒதுங்கியிருந்தாராம். இதனால் அவரை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று கருதித்தான் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்களாம். ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் இவர்தான் முதல் மதிப்பெண் எடுத்தவராம்’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் நடக்கும்னு பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டதே.. அது என்ன ஆனது..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

 ‘‘மாற்றம் இப்போதைக்கு இல்லை. இந்த மாதம் திருச்சி கமிஷனராக இருக்கும் வரதராஜன், தென் மண்டல ஐஜியாக இருக்கும் சண்முகராஜேஸ்வரன் ஓய்வு பெறுகிறார்கள். அவர்கள் பதவியை நிரப்ப 2 அதிகாரிகளை மாற்ற வேண்டும். இதனால் இந்த மாத இறுதியில் அந்த இரு பதவிகளுடன் சேர்த்து மாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநராக இருந்தவர் இப்ப மாற்றப்பட்டிருக்கிறாரே..அதில் ஏதாவது விவகாரம் இருக்கா..’’ ‘‘இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் கூறப்பட்டதாம். இவரது துறைக்கு ரியல் எஸ்டேட் மற்றும் பெரிய அளவில் கட்டிடம் கட்டுவதற்கான பைல் வருமாம். அந்த பைல் குறித்து அமைச்சரே சொன்னாலும் நகராதாம். சம்பந்தப்பட்டவர்கள் வந்து இவரை நேரடியாக பார்த்து, கவனித்தால்தான் பைல் நகருமாம். அதில் அவர் கராறாக இருந்தாராம். இதனால் ஒரு பைல் கூட நகராமல் இருந்ததும். இதுகுறித்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் துணை முதல்வரிடம் புகார் செய்தார்களாம். இதனால்தான் அவர் அதிரடியாக மாற்றப்பட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘மரத்தடியில விசாரணை நடக்குதாமே..’’‘‘மாங்கனி நகரில் அழகு நிலையத்தில் பெண்களை நிர்வாண படம் எடுத்தவர்களை போலீசார் கைது செஞ்சாங்க. அவர்களுக்கு நடந்த மருத்துவ சோதனையில் கொரோனா உறுதியாச்சாம்... அந்த செய்தி போலீசாருக்கு உதறலாச்சாம். இந்த நபர்களிடம் தனியிடத்தில் வைத்து விசாரித்த போலீசார் பீதியின் உச்சத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்துட்டாங்க. இதனால 51 பேரை தனிமைப்படுத்திட்டாங்க. இநத் விஷயத்தில் ஒரு ஏசியான போலீஸ் உதவி கமிஷனர் மட்டும் பதற்றத்தில் இருக்காராம். காரணம், நிர்வாண படம் எடுத்தவரை செமையாக கவனிக்கும்போது, அவரது எச்சில் ஏசியின் கையில் பட்டதாம். அதனால், தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு, தனிமையில் உள்ளாராம் அந்த அதிகாரி. இதுபோக இனி எந்த ஸ்டேஷனிலும் உள்ளே விசாரணை கிடையாதுனு உயர் அதிகாரி கறாராக சொல்லிட்டாராம். இதனால ஸ்டேஷன்கள் முன் உள்ள மரத்தடியில் சாமியானா பந்தல் போட்டு, வழக்கு விசாரணையை காக்கிகள் நடத்தி வாராங்களாம். வெளியில் இருந்து வரும் யாரையும் ஸ்டேஷனுக்குள் அனுமதிப்பதில்லையாம். புகார் கொடுக்கனுமுனா வாசலிலேயே கொடுத்துட்டு போயிடனும் என பெட்டிஷனை வாங்கிட்டு அனுப்புறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பதவி போச்சு... இப்போது மாவட்டமும் இரண்டாக போகுது... ஓவராக சவுண்ட் விட்ட மில்க்கை ஓரங்கட்டப்போறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘விருதுநகர் இலை கட்சியில மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மில்க் துறையை வைத்திருந்தவர் கோலோச்சினார். அவரை இப்போது கட்சியில் டம்மி பண்ணி வைச்சிருக்காங்க.. இப்போ அந்த பதவியை பிடிக்க ஆளுங்கட்சியிலே கடும் போட்டியாம். இந்த மாவட்ட செயலாளர் பதவிக்கு தமிழை வளர்க்கும் அமைச்சரும்... ஆறு ெபயர் கொண்ட மாஜி அமைச்சரும் மாஜி எம்எல்ஏ மில்க்னு நாலு பேர் முட்டி மோதுறாங்களாம். கட்சிப்பணியில சுறுசுறுப்பு காட்டுற, அமைச்சருக்கு எதிராக ‘டஃப்’ கொடுப்பவர்களைத்தான் மாவட்ட செயலாளர்கள் ஆக்க வேண்டும் என்பதில் அதிமுக தலைமை தெளிவாக இருக்கிறதாம்... விருதுநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, 2 மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் திட்டமாம்... அதுவும் இந்த கொரோனா காலக்கட்டத்திலேயே நியமித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறதாம் தலைமை. இதனால எப்படியாவது மாசெ சீட்டை பிடிச்சரனும்னு, விருதுநகர் மாவட்ட அதிமுக முக்கிய புள்ளிகளிடம் பலத்த போட்டி நிலவுதாம்... ஆனால் மில்க்கோ... என்னை மீறி யாரு வருவா... என்னை விட்டால் இந்த மாவட்டத்தில் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் கிடைக்குமானு தன் அடிபொடிகளிடம் கேட்கிறாராம்... அவர்களும் அண்ணே நீங்க தானே தொகுதி... தொகுதி என்றால் அது நீங்க தானே என்ற பொடி வைத்து பேசுறாங்களாம்.. சந்தோஷத்தில் மிதக்கும் அவரும் முக்கிய விவிஐபிக்களை சந்தித்து கெஞ்சி மீண்டும் பதவி தரணும்னு கேட்கிறாராம்... ’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்