SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெர்மாகோல் மினிஸ்டர் பேச்சால கணவனுக்கும், மனைவிக்கும் சமூக இடைவெளி ஏற்பட்ட கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-06-01@ 08:38:12

‘‘என்ன விக்கி பல வீடுகளில் ரேஷன் அட்டையை கொடுத்து 50 ஆயிரம் கடன் வாங்கச் சொல்லி பெண்கள் ஆண்களை விரட்டுறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நான் நேற்று மார்க்கெட் பக்கம் போனேன்... அங்கே ஒரு புருஷன் பெண்டாட்டி கிட்ட மாட்டிக்கிட்டு பட்ட அவஸ்தை இருக்கிறதே... ரொம்ப வேதனையாகவும் இருந்தது... காமெடி கலந்த வேதனையாகவும் இருந்தது..’’ என்று இழுத்தார் விக்கியானந்தா.

‘‘புருஷன்-பொண்டாட்டி மேட்டரா.. சீக்கிரம் சொல்லுங்க...’’ என்று பரபரத்தார் பீட்டர் மாமா.
‘‘ நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல... ஊரடங்கில் எல்லாம் ஒற்றுமையாக தான் இருக்காங்க... அதாவது ஒரு மினிஸ்டர் எதையாவது செய்யறாரு... இல்ல சொல்லிப்புடறாரு... இதனால அந்த புருஷன் பட்ட அவஸ்தையை சொல்றேன் கேளு... என்னங்க ரேஷன் கார்டு காட்டினா 50 ஆயிரம் பேங்க்ல தர்றாங்கன்னு மினிஸ்டரு சொல்லியிருக்காரு. அதனால திங்கட்கிழமை காலையில 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு முதல் ஆளா கூட்டுறவு பேங்க் வாசல்ல நின்னு கார்ட்டை காட்டி 50 ஆயிரத்தை வாங்கிட்டு வந்துடுங்கனு அந்த பொண்டாட்டி சொன்னாங்க... அட போடி, யாராவது ரேஷன் கார்டுக்கு பணம் தருவாங்களா... அது சும்மா வாயில வந்தத மினிஸ்டர் சொல்லியிருப்பாரு என்று புருஷன் உண்மைய சொல்ல.. தண்டச்சோறு, ஒரு மினிஸ்டர் தப்பாவா சொல்வாரு...  லைன்ல போய் நிக்க உங்களுக்கு கூச்சம்... பொண்டாட்டி சொல்லி புருஷன் போறதான்னு ஒரு ஆணாதிக்க எண்ணம். அதுக்கு தான் முதல்லேயே என் பெயர்ல ரேஷன் கார்ட்டை மாத்தி இருந்தா நான் போய் பேங்க்ல 50 ஆயிரம் வாங்கி இருப்பேன். நான் சொன்னத செய்யாததால உங்களுக்கு 60 நாளைக்கு ஊரடங்கு தான் போங்க... கிட்ட வராதீங்க என்று பொண்டாட்டி சொல்ல.... அதை கேட்ட புருஷன் தலையில் அடித்தபடியே சென்றதை பார்க்கும்போது வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருந்தது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இத்தனை பிரச்னைக்கும் காரணம் எந்த மினிஸ்டர்... அவரை மக்கள் விட்டு இருக்க மாட்டாங்களே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. பல வீடுகள்ல இந்த பிரச்னைக்கு காரணம் நம்ம தெர்மோகோல் மினிஸ்டர்தான்... சமீபத்துல தெர்மோகோல் மினிஸ்டர் மதுரையில் நிவாரணப் பொருட்கள் வழங்கி பேசினாரு... மக்களை தன் பக்கம் ஈர்க்க, ‘ரேஷன் கார்டு இருந்தால், கூட்டுறவு சங்கத்தில் ₹50 ஆயிரம் கடன் கொடுப்பாங்கனு... பெண்கள் மத்தியில், கடன் உதவியை பெறலாம்’ என பேசிட்டு பேசினாரு... ஊரடங்கால் வாழ்வு இழந்து... தொழில் இழந்துள்ள மக்களுக்கு தெர்மோகால் மினிஸ்டரின் பேச்சு டானிக்காக மாறிப்போச்சு... இதை கேட்ட பல பெண்கள் தங்கள் கணவரை வறுத்தெடுத்ததை தான் நான் மேலே சொன்னது.... பல குடும்பங்களில் மினிஸ்டரின் பேச்சு விரிசலை உருவாக்கி விட்டுடுச்சாம்... கணவர்கள் மட்டுமல்ல கூட்டுறவு வங்கி அதிகாரிகளும் பெண்களிடம் மாட்டி அவஸ்தை பட்டார்கள்... அவர்களிடம் அமைச்சரின் பேச்சு குறித்து விளக்கி சொல்லி கடன் ெகாடுக்க ரேஷன் கார்டு மட்டும் போதாது என்று கூறினாலும் பெண்கள் ஏற்கவில்லையாம்... கவர்மென்ட் நல்லது செய்தாலும் அதிகாரிகள் தடுப்பதாக அவர்கள் மீதே பாய்ந்து இருக்கிறார்கள். சங்கத்தில் உறுப்பினர் இல்லாமல், தொழில் எதுவும் செய்யாமல், கடன் கேட்பதை கண்டு கூட்டுறவு சங்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், இப்படி அமைச்சர் ஏதாவது வாய்க்கு வந்ததை கூறிவிட்டு செல்வார். அதை எப்படி செயல்படுத்த முடியும். எல்லா கூட்டுறவு சங்கமும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளால் நொடிந்து, முடங்கியுள்ள நிலையில், எப்படி கடன் கொடுக்க முடியும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் புலம்பி, ‘‘அப்படியெல்லாம் கடன் இல்லை. ஏமாற வேண்டாம்’’ என அவர்களை திருப்பி அனுப்பினாங்க... அதற்கு அப்புறம் தெர்மோகோல் அமைச்சர் நிருபர்களிடம் சொன்னது தான் டிவிஸ்ட்... ‘‘கடன் வேணுமா... அதிகாரிகள் கேட்கும் ஆவணத்தை கொடுத்தால், கடன் கிடைக்கும்...’’ என தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டது போல மழுப்பலாக பதில் கூறிவிட்டு எஸ்கேப் ஆனார்... சொல்றதை தெளிவாக சொல்லாமல் கணவன்-மனைவி, பொதுமக்கள்-வங்கி அதிகாரிகளிடையே சண்டை மூட்டிவிட்டதாக சொல்லி அதிகாரிகள் தரப்பு வேதனைப்படுது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காலாவதி லைசென்ஸ் மேட்டர் இருக்கிறதா சொன்னியே.. அது என்ன விஷயம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில் கட்டிட சர்வேயர்கள், இன்ஜினியர்கள் லைசென்ஸ் காலம் முடிஞ்சிருச்சாம். அதற்கு பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சியின் நேர்முக தேர்வில் கலந்திட்டு ஆவணங்களை சமர்ப்பிச்சு, 5 ஆயிரம் ரூபாய் செலுத்தி உரிமம் பெற விண்ணப்பிச்சாங்களாம். ஒரு வருஷமாகியும், இப்ப வரைக்கும் ஒருத்தருக்கு கூட லைசென்ஸ் கிடைக்கலையாம். புதுப்பிக்கிறதும் இல்லையாம்...புதுசா தர்றதுமில்லையாம்... கட்டிட சர்வேயர்கள் பழைய லைசென்ச வெச்சு கட்டிட வரைவு தயாரித்து மாநகராட்சியில் சமர்ப்பிக்கிறாங்களாம். புதிசா பி.இ படித்தவர்களும் உரிமம் பெற முடியாமல் தவிக்கறாங்களாம். மாநில அளவில் அனைத்து மாநகராட்சிகளிலும் உரிமம் வழங்கறாங்க...ஆனா...கோவையில் மட்டும் நிறுத்தி வெச்சிருக்கிறது சர்ச்சையை கிளப்பியிருக்காம். மாநகராட்சி கமிஷனரிடம் கட்டிட சர்வேயர்கள் சங்கத்தினர் புகார் செஞ்சும் பயனில்லையாம். பொறுமை இழந்த அவங்க, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தாங்களாம். அப்பவும் வேலையாகலையாம்... காலாவதி லைசென்சை மாநகராட்சி நிர்வாகம் எப்படி ஏற்குது, கட்டிடத்தில் எதாவது பிரச்னை, நீதிமன்ற வழக்குன்னா யார் பொறுப்பு, ஒரு வருஷமா கட்டட வரைவு சமர்ப்பிக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் விதிமுறை மீறல் பட்டியலில் சேர்க்கப்படுமான்னு பல சந்தேகங்கள் மாநகராட்சி வட்டாரத்தில் எழுந்திருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்