SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா நன்கொடை கேட்டு கரன்சிகளை குவிக்கும் ஆளும்கட்சி பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-05-30@ 04:13:47

‘‘கலெக்டர் பதறிப்போய் இருப்பதாக சொல்கிறார்களே.. என்ன விஷயமாம்..’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.   ‘‘குமரி மாவட்டம்  அஞ்சுகிராமம் அருகே பால்குளம் பகுதியில், குடிசை மாற்று வாரியம் மூலம் ₹36.24 கோடியில் 480 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இதை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் திறந்து வைத்தார். கன்னியாகுமரி கொட்டாரம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து, பயனாளிகளிடம் சாவியை ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சென்ற கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகியோரை மேடை ஏற விடாமல் அனுப்பி வைத்தனர். ‘சி.எம். உத்தரவால் தான் உங்களை மேடை ஏற்றவில்லை’ என்று கலெக்டர் கூறி இருக்கிறார்.  இப்போது இதுபற்றி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் புகார்  அனுப்ப உள்ளதாக கலெக்டருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் பதறிப்போய், மாவட்டத்தில் உள்ள டெல்லி பிரதிநிதியான தளவாய்சுந்தரத்திடம் கூறினார். அவரும், ‘நான் பார்த்துக்கிறேன்..’ என்று கூறினாலும் கலெக்டர் பதைபதைப்போடுதான் இருக்கிறாராம்.

‘‘கிராமங்களில் கோடை மின்வெட்டு அதிகமாயிட்டு வருதாமே..’’   ‘‘விழுப்பும், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் மின்வாரிய மண்டலத்தில் கிராமங்களில் கோடை மின்வெட்டு அதிகமாயிடுச்சு. காரணம், கிராமத்தில் உள்ள இளநிலை, உதவிமின்வாரிய அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரியெல்லாம் எஸ்இ, சிஇ படிச்சி தலைமைஅலுவலகத்திலே பணியாற்றிட்டு வராங்களாம். கிராமப்புற இளநிலை, உதவி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேன் லெவலுக்கு கீழேதான் அலுவலகமே செயல்படுகிறதாம். உத்தரவுமட்டும், தலைமைஅலுவலகத்திலிருந்து அதிகாரிகள் போன் மூலம் வழங்கி வராங்களாம். இதனால், கிராமங்களில் சரியாக மின்வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளமுடியாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறதாம். ஊரடங்கு காலத்தில் நகரத்திலேயே அலுவலகம், குடும்பம், குட்டியோடு இருந்தும் வரும் அதிகாரிங்க கிராமத்து மக்களின் கஷ்டத்தை புரிஞ்சிக்காம போனது ஏனோ? உயர் அதிகரிகள் மட்டத்திலும் கவனிக்கப்படுவதால் விழுப்புரம் மின்வாரிய மண்டலத்துக்கு எந்த புகார் போனாலும் நடவடிக்கையில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘கொரோனா நிவாரணம் பாக்கெட்டுக்கு போகிறதா குற்றச்சாட்டு வருதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி மாஜி அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பீளமேடு பகுதியில், வார்டு மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார். இதை பிரித்து பார்த்தபோது, ரேஷன் அரிசி இருந்துள்ளதை பார்த்து அப்பகுதி ெபண்கள் அதிர்ந்து ேபாய்விட்டனர். ‘இதைத்தானே ரேஷன் கடையில இலவசமாக வாங்கினோம், இந்த ஆளு வேற, அதையே தர்றாரு’ என கொதித்துப்ேபான சில ெபண்கள், அவரது வீட்டுக்ேக சென்றுவிட்டனர். நிவாரணப்பொருட்களை தூக்கி வீசிவிட்டு, நாலு வசனம் பேசிவிட்டு வந்துவிட்டனர்.இதற்கிடையில், அந்த மாஜி கவுன்சிலர், ஒவ்வொரு ேரஷன் கடைக்கும் ெசன்று, நிவாரண பொருட்கள் வழங்க வேண்டியுள்ளது, ஒரு மூட்டை ேரஷன் அரிசி வேணும், பருப்பு வேணும்... என பல மூட்டைகளை சேகரித்து விட்டார். இதை அப்படியே இட்லி மாவு தயாரிக்கும் சில நபர்களுக்கு விற்று, காசு பார்த்துவிட்டார். அத்துடன் விடவில்லை. பீளமேடு பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பலரை நேரில் சந்தித்து, ‘வார்டு மக்களுக்கு கொரோனா நிதியுதவி வழங்க வேண்டியுள்ளது, ஏதாச்சும் நன்கொடை கொடுத்தால் வசதியாக இருக்கும்..’ என கேட்டு, கரன்சி குவித்துவிட்டார். இதையும் பாக்கெட்டில் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

 இதுபற்றி கேள்விப்பட்ட வார்டு மக்கள், இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இவர், ஏற்கனவே, பல்வேறு மோசடி வழக்கில் சிக்கி, அப்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இவர், ரீ-எண்ட்ரி ஆகி, தற்போது தனது ஆட்டத்தை மீண்டும் துவக்கியுள்ளார். ‘சால்ட்'''' அடைமொழி கொண்ட இவரை கண்டு, வார்டு மக்கள் முகம் சுளிக்கின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கனிமவளம் கொள்ளை போகுதாமே..’’  ‘‘சிவகங்கை மாவட்டத்தில் செங்கல் தொழில் பிரதானமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக சவுடு மண் அள்ளுவதற்கு மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியின் ‘முக்கிய புள்ளி’யின் ஆசி அவசியமாம்.‘பாட்சா பட வில்லன்’ பெயருக்குரிய அந்த ‘புள்ளியை’ பார்த்தால் தான், குவாரிக்கான கனிமவளம் குறித்த பைல் கலெக்டரின் பார்வைக்கே போகுமாம். இல்லையென்றால் ஆண்டுகணக்கில் கனிமவளத்துறையினர் அலைக்கழித்துவிடுவார்கள் என்று ஆளும்கட்சியினரே கிசுகிசுக்கின்றனர். சவுடுமண், செம்மண்ணுக்கு ஆளும்தரப்பினரே விலை நிர்ணயம் செய்வதால் செங்கல் தயாரிப்பு தொழிலும், கட்டுமானத்துறை ஒப்பந்ததாரர்களும், சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனராம்.

சவுடுமண் ஒரு லோடு 2017ல் ரூ.2 ஆயிரமாக இருந்தது. அதனால் ஒரு லோடு செங்கல் ரூ.16 ஆயிரத்திற்கு கிடைத்தது. இப்போது சவுடு ஒரு லோடு ரூ.5800. அதனால் செங்கல் ஒரு லோடு ₹22 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதே சாலை அமைக்க, வீடு கட்டுமான பேஸ்மென்ட்டில் பயன்படுத்தும் கிராவல் ஒரு லோடு ₹2 ஆயிரத்து ஐநூறாக இருந்தது. தற்போது ஆறாயிரத்தை தாண்டுகிறது. இதற்கு காரணம் ஆளும்கட்சி பிரமுகரின் விலை நிர்ணயம்தான். அவருடன், குவாரி உரிமையாளர்களும் ஆளுக்கு பாதியாக லாபத்தை பிரித்து கொள்கிறார்கள். மானாமதுரை வைகை ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ள இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடையை மறைமுகமாக செய்து வருவதும் இந்த ஆளும் தரப்பினர்தானாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்