அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ
2020-05-28@ 13:55:17

லக்னோ : அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவகாரத்து செய்ய வேண்டுமென்று 'பாதாள் லோக்' வெப் சீரிஸ்க்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்த பாஜக எம்.எல்.ஏ நந்திகிஷோர் கூறியுள்ளார்.அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி கவனிக்கத்தக்க வகையில் ஈர்த்த 'பாதாள் லோக்’ வெப் சீரிஸை அனுஷ்கா சர்மா தயாரித்திருந்தார். இந்துத்துவ அரசியல், சாதிய ஏற்றத்தாழ்வு, காவல்துறை சிஸ்டம், ஊடக அரசியல் என்று பல விஷயங்களை இந்த தொடர் உடைத்துப் பேசியது.காட்சிகள் அனைத்தும் தற்போதைய அரசியல் சூழலுக்கு பொருந்தியதால், 7 மணி நேரம் ஓடக்கூடிய மொத்த தொடரும் விறுவிறுப்பாக அமைந்தது. எனினும், வலதுசாரி ஆதரவாளர்கள் சீரிஸ்க்கு எதிராக ஏற்கனவே கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கூர்க்கா இன மக்களை இந்த தொடரில் இழிவு படுத்தியதாக டார்ஜிலிங் பாஜக எம்.பி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் உத்திரபிரதேச எம்.எல்.ஏ நந்திகிஷோர் அளித்த பேட்டி ஒன்றில், “விராட் கோலி ஒரு தேசபக்தர். அவர் தேசத்திற்காக விளையாடி வருகிறார். எனவே அவர் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும்“ என்று கூறியுள்ளார்.'பாதாள் லோக்’ வெப் சீரிஸ் கதைப்படி, உத்தரப்பிரதேசத்தில் அமைச்சராக உள்ள ஒருவர் சாலைகளை திறந்து வைக்கும் புகைப்படம் நாளிதழில் வெளியாகியிருக்கும். அந்த புகைப்படத்தில் இருக்கும் ஒருவர் தற்போது பாஜக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.நிஜத்திலும் அதேபோன்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், சாலைகளை திறந்து வைக்க எம்.எல்.ஏ நந்கிஷோர் குர்ஜார், அவரின் பின்னால் நிற்பார். 'பாதாள் லோக்’ சீரிஸிலும் நந்கிஷோரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.இதனால், தன் அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், குர்ஜார் சமூக மக்களை தொடரில் தவறாக சித்தரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்தத் தொடரில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிபிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதில் பாரபட்சம் குஜராத்துக்கு 1200 மெட்ரிக் டன் ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
ரூ.300 டிக்கெட்டில் 90 நாட்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை நாடாளுமன்ற அவசர கூட்டத்தைக் கூட்டுங்கள்
மோடி பதவி விலக கோரி ஹேஷ்டேக்: டிரெண்டிங்கில் நம்பர் 1
கொரோனா வைரசுக்கு எதிராக இரட்டை மாஸ்க் தரும் இரட்டிப்பு பாதுகாப்பு: ஆய்வில் தகவல்
மின் வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெறும்: நிதின் கட்கரி நம்பிக்கை