தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வருகை: கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த அரசு திட்டம்...!
2020-05-26@ 10:28:46

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க வருகிற மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காகவும், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளும் தங்களுக்கு ஏற்றார்போல் செயல்படுத்தி வருகின்றனர். இருந்தாலும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்வதில் தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக RT-PCR கருவிகள் மூலம் தொடர் சோதனையை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் சோதனை கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டது. முதலில் ஒரு லட்சம் RT-PCR சோதனைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள், தமிழகம் வந்து சேர்ந்த நிலையில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 10 லட்சம் RT-PCR சோதனைக் கருவிகளுக்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தென்கொரிய நிறுவனத்திடமிருந்து மேலும், 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்ததுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. எனவே, பெற்ற பிசிஆர் கருவிகள் மூலம் சோதனையை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,758 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்
போட்டோவுக்கு வித, விதமாக போஸ் கொடுத்து திருவிக. நகர் போலீஸ் ஸ்டேஷனில்; ரவுசு காட்டிய போதை இளைஞர்கள்
மாமல்லபுரம், கல்பாக்கத்தில் உயர் ரக பைக் திருடிய 3 பேர் கைது
அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்.!
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..