10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகமா?.. மிஸ்டு கால் கொடுக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2020-05-23@ 15:50:10

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு மையங்கள் தயார் செய்வதற்கான பணிகளும் தொடர்ச்சியாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் மிஸ்டு கால் கொடுத்து விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது வரும் ஜுன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு எழுதக்கூடிய மனநிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது.
மேலும் தேர்வுகளை மேலும் தள்ளிவைக்குமாறு கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக 10-ம் மாணவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களை போக்குவதற்கு பள்ளிக்கலவித்துறை சார்பில் ஒரு நூதன முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மிஸ்டு கால் கொடுத்து பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை போக்கிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10-ம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம். கொரோனா அச்சமின்று எவ்வாறு தேற்றவை எழுதுவது என்பது குறித்து ஆடியோ ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குடியரசு தின சிறப்பு சலுகை: ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவிப்பு
பொன்னுசாமி மறைவு முத்தரசன் இரங்கல்
பொங்கல் விழாவில் தமிழிசை பங்கேற்பு
எம்.வேலுத்தேவர் மறைவிற்கு கே.எஸ்.அழகிரி இரங்கல்
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே விசைப்படகு கட்டும் தளத்தில் திடீர் தீ
ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்