கொரோனா சிகிச்சைக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த கூடாது : வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
2020-05-23@ 14:36:29

டெல்லி: கொரோனா தடுப்பில், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாட்டை, மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
*கொரோனா சிகிச்சைக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த கூடாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
*பிறருக்கு முதல் நாளில் 2 முறை 400MG பயன்படுத்தலாம் என்றும் அடுத்த 7 வாரங்களுக்கு வாராத்திற்கு 400 MG என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், அத்தகைய பகுதிகளில் உள்ள பிற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், ஆய்வகத்தில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை முன்தடுப்பு மருந்தாக வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகளின் பட்டியலையும் சுகாதார ஆலோசனைக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு..
1) தகவலறிந்த ஒப்புதலுடன் கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
2) பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் பரிந்துரைப்படி மட்டுமே மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
3) மருந்துகளைத் தொடங்குவதற்கு முன் ஏதேனும் பாதகமான நிகழ்வு அல்லது சாத்தியமான போதைப்பொருள் தொடர்புக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது.
4)பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
மேலும் செய்திகள்
கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி
உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஆணுறுப்பை தொட சொன்ன இயக்குனர்: பாலிவுட் கவர்ச்சி நடிகை ‘மீடூ’-வில் பரபரப்பு புகார்
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் : பிரதமர் மோடி
வரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்.... அதிர்ச்சியில் அமமுகவினர்
வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதின் விளைவு!: 17 கோப்புகளில் கையெப்பம் இட்டார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி..!!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!