ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகே கொள்ளையன் வெட்டிக்கொலை
2020-05-23@ 02:16:27

சென்னை: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (26), பிரபல கொள்ளையன். இவர் மீது பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் தேவா என்பவரின் தம்பி அஜித்குமாரை சிலர் செம்மஞ்சேரியில் ஏரியில் தள்ளிவிட்டதில் நீச்சல் தெரியாமல் இறந்தார். அப்போது கொள்ளையன் ரமேஷ் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் தான் தனது சகோதரனை தண்ணீரில் தள்ளி கொலை செய்து இருக்க கூடும் என்று தேவா சந்தேகமடைந்தார்.இதனால், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, தேவா தனது நண்பர்கள் 7 பேருடன் கொள்ளையன் ரமேஷை நெற்குன்றத்தில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் குடியிருப்பு அருகே நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்று, மது அருந்தியுள்ளார்.
போதை தைலைக்கேறியதும், நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். தகவலறிந்த விரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார், 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தேவா உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உல்லாச வாலிபர் கைது
பொதுமக்கள் கண்முன் கேபிள் டிவி ஆபரேட்டர் சரமாரி வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்; எம்எல்ஏ வீட்டு அருகே பரபரப்பு
போக்சோவில் டிரைவர் கைது
நகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ் சீருடையில் ரூ.80 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்: தக்கலை அருகே பரபரப்பு சம்பவம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு சிறை: மகிளா நீதமன்றம் உத்தரவு
பைக்கில் மணல் கடத்தல்; 2 பேர் கைது
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!