ஆர்பிஎப், ரயில்வே போலீசார் 50 பேருக்கு கொரோனா: உயர் அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
2020-05-23@ 01:19:20

சென்னை: சென்னையில் பணிபுரியும் ஆர்பிஎப் மற்றும் ரயில்வே போலீசார், குடும்பத்தினர் உட்பட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் உயர்அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையில் 55 வயதுக்கு மேல் உள்ள போலீசார் யாரும் பணிக்கு வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். ஆனால் ரயில்ேவ போலீஸ் உயர்அதிகாரிகள் அந்த உத்தரவை கடைப்பிடிக்காமல் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனால் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் உட்பட 20 காவலர்களுக்கும், சென்னை ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்த 57 வயதான இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்கள் குடியிருப்பில் வசித்து வந்த 9 பேருக்கு என மொத்தம் 32 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த உயர் அதிகாரியும் குடியிருப்பை நேரில் வந்து பார்வையிடவோ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவோ வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்த 15 ஆர்பிஎப் போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி கடைகள் அமைப்பதை எதிர்த்து மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மெரினாவில் வியாபாரிகள் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது
ராகுல்காந்தி பூரண நலம்பெற வேண்டி காங்கிரஸ் கட்சியினர் 108 பால்குட ஊர்வலம்
தமிழகத்தில் தினசரி பாதிப்பு 13,000ஐ தாண்டியது: கொரோனாவால் ஒரே நாளில் 13,776 பேர் பாதிப்பு; 78 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு..!
ஆன்லைன் முறையை பயன்படுத்துங்கள்..! தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கு: முன்ஜாமின் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல்..!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!