பாகிஸ்தான் விமான விபத்து; 97 பேர் உயிரிழப்பு என தகவல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
2020-05-22@ 19:43:17

டெல்லி: பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் எனவும் கூறினார். பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 85 பயணிகளும், 12 விமான பணி குழுவினரும் சேர்த்து 97 பேர் பேர் இருந்துள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியதாக முதல்கட்ட தகவல் வந்துள்ளது. விமானியின் எச்சரிக்கையை அடுத்து உடனடியாக தரையிறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனால் அந்த பகுதியை சுற்றி வருவதற்கு விமானி முடிவு எடுத்ததாகவும், அந்த பகுதியை சுற்றி வரும் சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு மிகவும் அதிகமாகி குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி இருக்கிறது என்றும் சொல்லப்படுகின்றது. விமானத்தில் பயணம் செய்த 97 பேரின் நிலைமை என்ன ஆனது ? என்பது வருந்தத்தக்க செய்தியாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடிய பகுதியானது குடியிருப்பு பகுதியாகும். இந்நிலையில், பாகிஸ்தானில் விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்