ஓவியம் வரைந்து நிதி திரட்ட சோனாக்ஷி சின்ஹா முடிவு
2020-05-20@ 01:15:37

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பாலிவுட் நடிகைகள் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்து வருகிறார்கள். பிரியங்கா சோப்ரா அமெரிக்கா வாழ் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு கோடி கணக்கில் உதவி வருகிறார். ஊர்வசி ரத்தோல் நடனம் ஆடி 5 கோடி நிதி வசூல் செய்து கொடுத்தார். அந்த வரிசையில் தமிழில் லிங்கா படத்தில் நடித்தவரும் பாலிவுட் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா ஓவியம் வரைந்து அதன் மூலம் நிதி திரட்டப்போவதோக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் என்னுடைய நண்பர்களை சந்திக்க முடியாமல் தவிக்கிறேன். ஆனால் வேறொரு கோணத்தில் சிந்திக்கும்போது இது ஒரு பிரச்சினை இல்லை என்று தோன்றுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பது எனக்குச் சவாலானதாக இருக்கவில்லை.
ஏனெனில் என் அன்புக்குரியவர்களோடு வீட்டில் இருக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும் வெளியே தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு, குடும்பத்தை விட்டு, சாப்பிட ஏதுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் சவாலானது. நான் அவர்களுக்காக வருந்துகிறேன், அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். இந்த ஊரடங்கின் மூலம் நான் மீண்டும் ஓவியம் வரையத் தொடங்கிவிட்டேன். அதன் மூலம் பெரிய அளவில் உதவி செய்ய விரும்புகிறேன். என்னுடைய ஓவியங்களின் மூலம் நிதி திரட்ட தீர்மானித்துள்ளேன். இதுபற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு சோனாக்ஷி கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி பேச்சு!!
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!