SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் : எச்.ராஜா ட்விட்

2020-05-19@ 17:33:06

சென்னை : பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா ட்விட் செய்துள்ளார்.நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை விமர்சித்தார் என்று குற்றம்சாட்டி பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் பெண்கள் பங்கேற்பது இல்லை என்றெல்லாம் விவாதங்கள் கிளம்பின.

அதேவேளையில் பாரதப் பிரதமரை கல்லால் அடிப்பேன் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பது ஏற்புடையதா ? என்று பாஜகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதற்கு ஒரு படி மேலே சென்ற பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா, 'கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும்', என்று ட்விட் செய்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்