SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிக்கணக்கில் இடைவிடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதால்கடுமையான கண் பிரச்னை ஏற்படும்: டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் எஸ்.சவுந்தரி பேட்டி

2020-05-17@ 02:08:06

சென்னை: டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் பிரபல கண் மருத்துவர் எஸ்.சவுந்தரி கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் கணினி, மொபைல், டிவி திரைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் கடுமையான கண் பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக மாணவர்களுக்கு குறைந்தபட்சம் கண் பிரச்னைகள் சார்ந்த சில அறிகுறிகள் உள்ளன என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நேர்வுகளில் கண் பிரச்னைகளை அலட்சியப்படுத்தக்கூடாது மற்றும் கண் சுகாதாரம் குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது. கண் நலிசோர்வு: ஒளிபடர்ந்த சாதனங்களுடன் மற்றும் பெரும்பாலும் ஏதுவான ஒளிக்கு மற்றும் பணிச்சூழலுக்கு குறைவான நிலைக்கு நேரடியாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் வெளிப்படுவதாலும் கண் நலிசோர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இது மங்கலான பார்வை, லேசான உணர்வுத்தன்மை மற்றும் கவனம் செலுத்துவதில் சுணக்கம் ஆகியவற்றிற்கும் வழிவகுக்கக்கூடும். இத்துடன் தலைவலி, கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகு வலிகள் மற்றும் ஒட்டுமொத்த சோர்வுடன், தூக்கப் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். கணினி பார்வை நோய்க்குறி: இந்த கண் பிரச்னை. கார்பல் ட்யூனல் சின்ட்ரோம் போன்றது. கண்கள் ஒரு நீண்ட காலத்திற்கு ஒரே பாதையை பின்பற்றுமானால் இந்த பிரச்னை எழுகிறது. கணினிகளுடன் வேலை செய்யும்போது, கண்கள் எப்போதும், எல்லா சமயங்களிலும் போக்கஸ் மற்றும் ரீபோக்கஸ் செய்யவேண்டும். இதன் விளைவாக கண் தசைகளில் நிறைய சோர்வு விளைவிக்கக்கூடும்.

இதற்கு மேலும், கான்ட்ராஸ்ட் (வேறுபாடு), ஒளிசிமிட்டல், இமைத்தல் மற்றும் கூசுதல் ஆகியவற்றை மாற்ற முற்படும் திரை நம் கண்களுக்கு கடுமையான பிரச்னைகளை விளைவிக்க நேரிடும். மேலும் கண்கள் தொடர்ந்து நகரக்கூடிய மற்றும் மாறக்கூடிய உருவப் படங்களுக்கு எதிர்வினையாற்றி கண் தசைகளுக்கு நிறைய சோர்வை விளைவிக்கக்கூடும்.   சிகிச்சை: கண் அழுத்தம் மற்றும் உலர்ந்த கண்கள் ஆகியவை உட்பட, இத்தகைய கண் பிரச்னைகளுக்கு கண் மருத்துவருடனான ஆலோசனையின் பேரில் எளிதாக சிகிச்சைபெற முடியும். கண் பிரச்னைகளை குறைப்பதற்கு வாழ்க்கைமுறை மாற்ற நிவாரணங்கள்:  டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துகின்றபோது உரிய காலஅளவுகளில் இடைவேளைகளை எடுத்துக்கொள்ளவும்.

20-20-20 விதியினை பயன்படுத்தவும்; 20 அடி தூரத்திலுள்ள இடத்தை, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 நொடிகள் பார்ப்பது. வழக்கமான வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் செய்வது, கண் பிரச்னைகளிலிருந்து உங்களை பாதுகாக்கும். ஆரோக்கியமான உணவு முறையானது வயதுடன் தொடர்புடைய கண் பிரச்னைகளை குறைக்கக்கூடும். தவறாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியானது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் கண்களுக்கு ஆக்சிஜன் செல்லும் அளவை அதிகரிக்கும் மற்றும் நச்சுக்களை அகற்றுவதற்கு உதவும். நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்ப்பது, பொதுவாக கணினியை பார்ப்பதால் ஏற்படும் நோய் பாதிப்பு அறிகுறியை உருவாக்காது; எனினும், அதை பார்ப்பதற்காக நீங்கள் அமர்ந்திருக்கும் தூரத்தை இது சார்ந்திருக்கும். தொலைக்காட்சி பெட்டிக்கு மிக நெருக்கமாக அமர்ந்து பார்ப்பது கண் அழுத்தத்தையும் மற்றும் கழுத்தில் வலியுடன் கூடிய அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

கண்களை ஈரப்பதமுள்ளதாகவும், புத்துணர்வு உள்ளதாகவும் வைத்திருப்பதற்கு கண்களை மூடி திறக்கின்ற வழக்கத்தைப் பின்பற்றவும். ஆரோக்கியமான கண்களுக்கு, கண்களை மசாஜ் செய்வது ஒரு நிவாரணமாக கருதப்படுகிறது. கைகளில் சூடு ஏறுகின்ற வரை நன்றாக தேய்த்து, கண்களுக்கு மேலே மிருதுவாக அழுத்தவும். ஒரு இயற்கையான வழிமுறையில் கண் தசைகளை தளர்வாக்குவதற்கு இது உதவும். கணினி பயன்பாட்டோடு தொடர்புடைய தலைவலி, கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை வலி ஏற்படும் இடரைக் குறைப்பதற்கு, குறைந்தது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையைப் பார்ப்பதிலிருந்து விலகிக் செல்லவும். எழுந்து நடக்கவும், கைகள், கால்கள், கழுத்து மற்றும் தோள்பட்டையை நீட்டி, மடக்கி சிறு உடற்பயிற்சிகள் செய்வது அழுத்தத்தையும் மற்றும் தசை களைப்பையும் குறைக்க உதவும்.

 குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனைகள் செய்துகொள்வது, கண் பிரச்னைகளுக்கான இடரிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். கண் பரிசோதனையின்போது, உங்களது தினசரி கணினி பயன்பாடு குறித்த உண்மையான தகவலை மருத்துவரிடம் தெரிவிக்கவும். கண் ஆரோக்கியம் மீது சரியான அக்கறை காட்டுவது பார்வைத்திறன் பிரச்னைகளை குறைக்கும். குறித்த காலஅளவுகளில் கண் மருத்துவரை சந்தித்து, கண் பரிசோதனை செய்து கொள்வது முறையான பார்வைத்திறன் நீடிப்பதை உறுதிசெய்யும். மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை தவறாது செயல்படுத்துவது கண் பிரச்னைகளை முற்றிலுமாக குறைப்பதற்கு நிச்சயம் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்