முழு பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும்போது செலவு 3 மடங்கு அதிகரிக்கும்: போக்குவரத்து தொழிற் சங்கம் தகவல்
2020-05-12@ 19:49:02

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் தினந்தோறும் 21,000 பேருந்துகளை இயக்குகிறது. இதில் 2.10 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். ஒரு பேருந்தில் ஒரு நேரத்தில் சட்டப்படி அனுமதிக்க வேண்டிய பயணிகள் எண்ணிக்கையை போல் 2 முதல் 3 மடங்கு வரை ஏற்றப்படுகிறது. அப்படி ஏற்றினாலும் வருவாயை விட பேருந்து இயக்க செலவு 1 கி.மீட்டருக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை அதிக செலவாகின்றது.
ஒரு பேருந்தில் 6 அடி சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய அனுமதித்தால் 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்க முடியும். அதற்குமேல் அனுமதித்தால் சமூக இடைவெளி குறைந்து நோய் தொற்று பரவும் அபாயம் உண்டு.
அரசு பேருந்துகள் இயக்க அனுமதிப்பது என்பது தமிழகத்தில் நோய் தொற்று மேலும் விரிவடைய காரணமாக இருந்துவிடக்கூடாது. நோய் தொற்றை தடுக்கும் வகையில் பேருந்துகளை இயக்க கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான ஏற்பாடுகளை செய்துகொண்டு முழுமையான பாதுகாப்புடன் இயக்க அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு முழுமையான பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும்போது, கழகங்களின் வருவாய் பன்மடங்கு மேலும் குறைந்து, பேருந்து இயக்க செலவு 3 மடங்கு அதிகரிக்கும். இந்த அதிக செலவு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும். பொருளாதார பரவலாக்கலுக்குமானது என்பதால், ஒட்டுமொத்த போக்குவரத்து கழகங்களின் செலவினத்தையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’
அகத்தீஸ்வரர் கோயில் நிலத்தை வைத்து வங்கியில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி? அதிகாரிகள் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்