ஓமன் வளைகுடாவில் பயிற்சியின்போது விபரீதம்: தனது சொந்த கப்பல் மீதே ஈரான் ஏவுகணை தாக்குதல்: 19 ஊழியர்கள் பலி
2020-05-12@ 01:07:50

டெஹ்ரான்: ஓமன் வளைகுடாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரான் கடற்படை, தனது சொந்த கப்பல் மீது எதிர்பாராத விதமாக நடத்திய ஏவுகணை தாக்குதலில் 19 மாலுமிகள் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார். இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக ஈரான் நாட்டு டிரோன்களை அமெரிக்காவும், அமெரிக்காவின் டிரோன்கள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஓமன் வளைகுடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரான் கடற்படை போர்க்கப்பல், ஒரு இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஏவுகணை, டெஹ்ரானுக்கு அருகே 1270 கிமீ தொலைவில் உள்ள ஜாஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஈரான் நாட்டு கப்பலை தாக்கியது. இதில், அந்த கப்பலில் இருந்த 19 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு
மியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி
அமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா: அதிபர் பைடனுக்கு முதல் சறுக்கல்
மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்க!: அதிபர் ஜோ பைடன் ஆணை..!!
கொழும்பு துறைமுக கன்டெய்னர் முனையம்: மீண்டும் இந்தியாவுக்கே கொடுத்தது இலங்கை
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்