SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு

2020-04-10@ 17:55:28

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6761-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆனது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்பற்றமாக மகாராஷ்டிராவில் 1,364 பேரும், டெல்லியில் 898 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேரும், அமெரிக்காவில் 16,697 பேரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 16,19,617 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,65,847 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை கூறியதாவது; கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

  • vilaaaa_neeemm

    அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

  • 26-01-2021

    26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • sun-dong25

    அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்