கொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது
2020-04-10@ 17:25:33

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான கேரளா, சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி முன்னோடி மாநிலமாக பல்வேறு தரப்பினர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கேரளாவில் ஜனவரி 30-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு முடிக்கிவிட்டது. தென்கொரிய முன்மாதிரியை பின்பற்றி மக்களை தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா அறிகுறி இருப்பவர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
தற்காப்பு கருவிகளுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு நிலவுவதால், எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிமுறைகள் கையாளப்பட்டது. இது கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்தியதுடன் மருத்துவ பணியாளருக்கு கொரோனா பரவுவதையும் தடுத்தது.
நாடு தழுவிய ஊரடங்கு அமலானதுமே முதல் மாநிலமான கேரள அரசு ரூ.20 000 கோடி-க்கு நிவாரண உதவிகளை அறிவித்து, உணவு பொருட்களை வீடுத் தேடி சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட்டம் குறைந்ததால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.
இந்தியாவில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக அடையாளம் கட்டப்பட்ட கேரளா இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயனை தேசிய ஊடங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
பாலக்காடு அருகே ருசிகரம்; ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியில் இளம்ஜோடி
94.1% பலன்: கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி.!!!
கேரளாவில் பலருக்கு இரட்டை வாக்குரிமை: இ- வாக்காளர் அட்டை பதிவிறக்கத்தால் அதிர்ச்சி
கொலை வழக்கில் தொடர்பு: மாஜி எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை
ரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!