கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி
2020-04-10@ 17:19:58

டெல்லி : கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்திவருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசு சார்பில் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரண உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில், கொரோனா பரவலைத் தடுக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக 16,730 கோடி ரூபாய் வழங்கி உதவுவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதியளித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவுவதற்கு தயாராக இருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிய ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் Masatsugu Asakawa நிதி வழங்குவதற்கான ஒப்புதலை தெரிவித்துள்ளார்.கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதற்காக வரும் காலங்களில் தேவைகேற்ப கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் மசாட்சுகு கூறியுள்ளார். தற்போது இந்திய சுகாதார துறையின் அவசர நிலையை கருதி, உடனடி நிதியாக 16 ஆயிரத்து 730 கோடி ரூபாய் அனுப்ப உள்ளதாக மசாட்சுகு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கேரளாவில் 39.70% கொரோனா நோயாளிகள்: இந்தியாவில் முதலிடம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு 2 வழக்குகளில் ஜாமீன்
திருச்சூர் அருகே படுஜோராக விற்பனையாகும் மூங்கில் சர்பத்: நாமும் குடிக்க செல்வோமா?
கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!