காமெடிகள் கூடாது
2020-04-10@ 00:04:06

பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு முடிவடைய இன்னும் 4 நாட்கள் நிலுவையில் உள்ளன. இந்த உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று செய்திகள் உலா வரத் தொடங்கி உள்ளன. ஊரடங்கு நீட்டிக்கப்படட்டும், இல்லாவிட்டால் படாமல் போகட்டும். ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவுப்படுத்தினால், மக்களே உங்களுக்கு மனமுவந்து ஆதரவு தெரிவிப்பார்கள். கடலில் தொடர்ந்து பயணிக்க தயார். ஆனால், படகில் போதுமான உணவு இல்லை என்றால்...? கிடைக்கும் உணவை பிடிக்க கடலில் குதிக்கத்தான் செய்வார்கள். இல்லாவிட்டால் படகிலேயே உயிர்போய்விடுமே? அதுபோன்ற நிலைதான் இப்போது நாடு முழுவதும் நிலவுகிறது.
வெறுமனே ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டோம்... ஜன்தன் கணக்கில் மாதம் 500 போடுகிறோம் என்று அறிவிப்பது மக்களின் கோபத்தை நான்கு நாட்களில் அதிகரிக்கச் செய்துவிடும். இந்த 1000மும், 500ம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது கொடுப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனினும், பசிக்கு அழும் குழந்தையை சமாளிக்க வைப்பதாக நினைத்து குச்சுமிட்டாய் வாங்கி தருகிறார்கள். இது சில நிமிடங்கள் வேண்டுமானால் குழந்தையின் வாயை அடக்கி வைக்கும். ஆனால், அடுத்தக்கணம் மீண்டும் பசிக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துவிடும். ஏழைகளின் நிலை இந்த 17 நாளில் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்து இருக்கும்.வீட்டில் சாப்பாடு கேட்டு கெஞ்சுபவர்கள் எல்லாம் சில பல ஆண்டுகளாக காணாமல் போய் இருந்தார்கள். இந்த ஊரடங்கில் அந்த கொடுமையை மீண்டும் பார்க்க ஆரம்பித்திருப்பது காலத்தின் கொடுமை.
ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அனைத்து தரப்பு மக்களின் நிலைமை குறித்து தெளிவாக ஆலோசித்து, அதன் பின்னர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவசரக்காலத்தில் இதுபோன்று நிதானித்து முடிவு எடுக்க முடியாது என்று கூற விளையும் மேதாவிகள், இந்த அவசரத்தை ஜனவரியிலேயே வெளிநாட்டு பயணிகளை தடுத்து நிறுத்தியிருந்தால், இந்த அவசர காலமே வந்திருக்காதே. திட்டமிடாமல், அப்போது செய்த தவறால் இப்போது மக்கள் வாடிவதங்கி வருகின்றனர். இனியாவது திட்டமிட்டு மக்களின் நலனை கருத்தில் கொ்ண்டு, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உரிய வழிமுறைகளை செய்துவிட்டு முடிவு எடுக்க வேண்டும்.
மூன்று மாதம் தவணை தள்ளிவைப்பு போன்ற காமெடிகளை விட, வட்டியை தள்ளுபடி செய்து, தவணை கட்டலாம் என்ற நிதர்சனமான பலன்களை அளிக்கலாம். பிஎப் கட்டுபவர்கள் அனைவருக்கும், 3 மாத சம்பளத்தை அரசே வழங்கலாம். முறைசாரா தொழிலாளர்களுக்கு வாரியங்கள் மூலம் குறைந்தபட்ச கூலித்தொகையை மாதத்துக்கு கணக்கிட்டு வங்கியில் செலுத்தலாம். எதிலுமே கணக்கில் வராத 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கலாம்.
Tags:
தலையங்கம்மேலும் செய்திகள்
காத்திருக்கும் சவால்
உயிர்துளியை உணர்வார்களா?
ஆபத்தை தரும் செயலிகள்
பொங்கல் பரிசு
அதிக சுமை
உச்சநீதிமன்றம் தந்த பாடம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்